வருகிறது சன் ஏர்லைன்ஸ்-ஜெ. தகவல்
சென்னை:முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தினர் 2 விமானங்களை வாங்கியுள்ளனர். விரைவில் சன் ஏர்லைன்ஸ் என்ற விமான நிறுவனத்தை அவர்கள் தொடங்கவுள்ளனர் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில், முதல்வர் கருணாநிதி எவ்வளவு பரம ஏழையாக இருந்தார் என்பதை மறைந்த கவியரசு கண்ணதாசன் தனது வனவாசம் என்ற வாழ்க்கை சரிதத்தில் பல இடங்களில் விரிவாக சொல்லியுள்ளார்.
ஆனால் கருணாநிதியின் குடும்பம் இன்று உலக பணக்காரக் குடும்பங்களின் வரிசையிலும், ஆசிய பணக்காரர்கள் வரிசையில் முதல் பத்து இடங்களுக்குள்ளும், அரபு நாட்டு ஷேக்குகளுக்கே சவால் விடும் வகையில் பெரும் பணக்கார குடும்பமாக மாறியுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 12ம் தேதி 2 விமானங்கள் வாங்கவுள்ளதாகவும், அதற்கு அனுமதி தருமாறும் கோரி சன் டிவி குழுமம் சார்பில் மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளனர். இந்த விமானங்ளை வெளிநாட்டு விமானிகள் ஓட்டுவார்கள் என்றும் அதில் தெரிவித்துள்ளனர்.
இந்த விண்ணப்பத்தை மின்னல் வேகத்தில் பரிசீலித்த மத்திய அரசு, ஜனவரி 1ம் தேதி சன் டிவி குழுமத்தினர் 2 விமானங்களை வாங்கிக் கொள்ளலாம் என்று அனுமதி அளித்துள்ளனர். ரூ. 236.94 கோடியில் இந்த 2 விமானங்களையும் வாங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
பரம ஏழையாக கண்ணதாசனின் நூலில் குறிப்பிடப்பட்ட கருணாநிதியின் குடும்பம் இன்று கோடிகளில் புரளுகிறது என்பதற்கு இதை விட வேறு அத்தாட்சி தேவையில்லை.
மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சி நடைபெற வேண்டும் என்று அடிக்கடி முதல்வர் கருணாநிதி கூறி வருவதன் நோக்கம் ஆகாய விமானங்களை வாங்குவதற்காகத்தான். கோடிகளைக் கொட்டி கருணாநிதி குடும்பம் விமான விளையாட்டில் ஈடுபட்டுள்ளது.
2 விமானங்களோடு இது நிற்கவில்லை. மேலும் பல விமானங்கள் வரவுள்ளன. சன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் விரைவில் பிறக்கும், அதன் விமானங்கள் வானில் பறக்கும். ஏழைகள் கஷ்டம் தீர்ந்த விடும், வேலை வாய்ப்பில்லாத இளைஞர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். ஏழைக் குழந்தைகள் சன் ஏர்லைன்ஸ் விமானத்தைப் பார்த்து மகிழ்ச்சி அடையலாம்.
கருணாநிதியின் குடும்பம் தரையில் இருக்கும் குடும்பம் அல்ல, ஆகாயத்தில் பறக்கும் குடும்பம். அவர்களது சொத்துக்களை ஆகாயத்தில்தான் கணக்கிட வேண்டும். அவர்களுக்கு வானமும் எல்லை இல்லை. வானம் மட்டும் வசப்படாது. அண்டசராசரங்களும், நட்சத்திரக் கூட்டமும், கருணாநிதி குடும்பத்துக்கு வசப்படும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications