தினகரன் கருத்துக் கணிப்பால் 3 உயிர்கள் பறிபோன அநியாயம்-காங்.
சென்னை:தினகரன் நாளிதழ் வெளியிட்ட தேவையில்லாத கருத்துக் கணிப்பால் அநியாயமாக 3 உயிர்கள் பறிபோயுள்ளன என்று சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் சுதர்சனம் கூறியுள்ளார்.
சட்டசபையில் இன்று மதுரை வன்முறை தொடர்பாக காங்கிரஸ் சார்பில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதன் மீது சுதர்சனம் பேசுகையில், முதல்வர் கருணாநிதியின் அடுத்த அரசியல் வாரிசு என்ற கருத்துக் கணிப்பை நடத்த வேண்டிய அவசியம் இப்போது என்ன.
முதல்வர் நலமாகத்தானே இருக்கிறார், அவருக்கு உடல் நலம் இல்லாமல் போய் விட்டதா. தேவையில்லாத இந்த கருத்துக் கணிப்பால் அப்பாவிகள் 3 பேரின் உயிர் அநியாயமாக போயுள்ளது.
ஒருவரை மட்டும் உயர்த்திக் காட்ட வேண்டும் என்பதற்காக கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. அப்படிச் செய்யும் போது மற்றவர்களைக் குறைத்துக் காட்டுவது தவறு. அந்தத் தவறினால்தான் இன்று மதுரையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்றார்.
மதிமுக சார்பில் பேசிய வீர. இளவரசன், மதுரையில் நடந்த வன்முறையின்போது, காவல்துறை கை கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.
காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியாத முதல்வர் கருணாநிதி உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றார்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications