அரசினர் தோட்டத்தில் புதிய சட்டசபை கட்டடம்:பழைய எம்எல்ஏ ஹாஸ்டல் இடிகிறது
சென்னை:தமிழக சட்டசபைக்கான புதிய கட்டடம் அண்ணா சாலையில் உள்ள அரசினர் தோட்டத்தில் அமையவுள்ளது.
இதற்காக அரசினர் தோட்டத்தில் உள்ள பழைய எம்எல்ஏ ஹாஸ்டல் மற்றும் சிபிசிஐடி தலைமையகம் ஆகியவை இடிக்கப்படவுள்ளன.
ஓமந்தூரார் எஸ்டேட் என்று அழைக்கப்படும் இந்த அரசினர் தோட்டம் இப்போதைய தலைமைச் செயலகத்தில் இருந்து சில கி.மீ. துரத்தில் தான் உள்ளது.
தமிழக சட்டசபைக்கு புதிய கட்டடம் கட்டப்படும் என முதல்வர் கருணாநிதி கடந்த 12ம் தேதி அறிவித்தார். கல்லூரிகளையோ, பல்கலைக்கழங்களையோ இடித்துத் தள்ளாமல் (ராணி மேரிக் கல்லூரியை இடித்துவிட்டு சட்டசபை கட்ட ஜெயலலிதா முயன்றது நினைவிருக்கலாம்) யாருக்கும் தொந்தரவு தராமல் ஒரு இடத்தில் சட்டசபை கட்டப்படும் என கருணாநிதி கூறியிருந்தார்.
இந் நிலையில் இன்று முதல்வர் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் சட்டசபைக்கு புதிய கட்டடம் கட்டுவது என முடிவெடுக்கப்பட்டது. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
புதிய சட்டசபை கட்டடம் கட்டப்படுவதால் இந்த தோட்டத்தில்உள்ள ராஜாஜி ஹால், கலைவாணர் அரங்கம் ஆகியவற்றுக்கு எந்த பாதிப்பும் வராமல் பார்த்துக் கொள்ளப்படும். அவற்றை இடிக்காமல் பாதுகாப்போம். அதே போல இங்கு கட்டப்பட்ட புதிய எம்எல்ஏ ஹாஸ்டலுக்கும் பாதிப்பு வராது என்று கூறப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது..
-
சென்னை மெட்ரோ தலைகீழாக மாறப்போகிறது.. ஷாப்பிங் + கொண்டாட்டம்.. ஒரே இடத்தில்! -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது












Click it and Unblock the Notifications