தா.கி கொலை வழக்கை பெங்களூருக்குமாற்ற கோரி மனு- அழகிரிக்கு புதிய சிக்கல்
டெல்லி:தா.கிருட்டிணன் கொலை வழக்கு விசாரணையை பெங்களூர் நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள் மதுரை நீதிமன்றத்தில் நடக்கும் இந்த வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தனர்.
திமுகவின் மூத்த தலைவராக இருந்த முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் உட்கட்சி சண்டையால் மதுரையில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். கடந்த 2003ம் ஆண்டு மே மாதம் நடந்த இந்த கொலை தொடர்பாக முதல்வர் கருணாநிதியின் மகன் அழகிரி கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியில் வந்தார்.
இந்த வழக்கு விசாரணை மதுரையில் செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந் நிலையில் இந்த வழக்கில் முக்கிய சாட்சியான சுரேஷ் குமார் என்ற கிரம்மர் சுரேஷ் ச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில்,
இந்தக் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட அழகிரி முதல்வரின் மகன் ஆவார். அவருக்கு பலமான அரசியல் செல்வாக்கு உள்ளது. இந்த கொலை வழக்கு விசாரணை மதுரையில் நடந்தால் எந்த சாட்சியும் பயமின்றி சாட்சி சொல்ல முன் வரமாட்டார்.
கடந்த ஜனவரி 30ம் தேதி மதுரையில் அழகிரியின் 56வது பிறந்த நாள் மிக பிரமாண்டமாகக் கொண்டாடப்பட்டது.அதில் கருணாநிதியும், அமைச்சர்களும், உயர் போலீஸ் அதிகாரிகளும், அரசு வழக்கறிஞர்களும், எம்எல்ஏக்களும் பங்கேற்றனர்.
இதனால் அழகிரிக்கு எதிரான வழக்கு விசாரணை மதுரையில் நியாயமாக நடக்க வாய்ப்பில்லை. இதனால் வழக்கை பெங்களூர் செசன்ஸ் நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும். அப்போது தான் நியாயமாகவும் நேர்மையாகவும் வழக்கு விசாிரக்கப்படும் என்று கூறியுள்ளார் சுரேஷ்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அசோக் பான், சிருபுகர் ஆகியோர் மதுரை நீதிமன்ற விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தனர். மேலும் தமிழக அரசுக்கு பதில் கோரி நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications