ராமர் பாலம் இருப்பதை நிரூபித்தால் ராஜினாமா-பாலு
மதுரை:ராமேஸ்வரம்-இலங்கை இடையே மனிதர்களால் கட்டப்பட்ட பாலம் உண்மை என நாஸா விண்வெளி ஆய்வு மையம் நிரூபித்தால் என பதவியை ராஜினாமா செய்ய தயார் என மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
மதுரை வந்த மத்திய அமைச்சர் பாலு, மதுரை- திருச்சி 4 வழி சாலை பணிகளை பார்வையிட்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சேது சமுத்திர திட்டம் நடைபெறும் இடத்தில் மணல் குன்றுகள் மட்டுமே உள்ளன. புவியியல்ரீதியில் சொன்னால் இதற்கு தம்போலோஸ் என்று பெயர். நிலவியல் மாற்றங்களால் இயற்கையாக உருவான மணல் குன்றுகள் இவை.
இதுவரை ேசது திட்டத்தில் 15 லட்சம் கியூபிக் மீட்டர் அளவிற்கு அகழ்வுப் பணி முடிவடைந்துள்ளது. எதிர்ப்பு மற்றும் போராட்டங்களினால் சேது சமுத்திர திட்டம் தடைபடாது. 2008 ஆண்டுக்குள் இத்திட்டம் முடிக்கப்பட்டு விடும்.
உமா பாரதி மத்திய கனிம வளத்துறை அமைச்சராக இருந்தபோது, அவரது உத்தரவின் பேரில் ஆடம் பாலம் (ராமர் பாலம்) குறித்து புவியியல் ஆய்வு துறையால் ஆய்வு செய்யப்பட்டது. அதற்காக ஆடம் பாலத்தை 200 மீட்டர் ஆழத்துக்கு வெட்டி சோதனையிட்டனர்.
அப்போது இந்தப் பாலம் நில மாற்றங்களால், இயற்கையாக உருவாகி 7 லட்சம் ஆண்டுகள் ஆவது தெரியவந்தது.
ஆனால் இராமயணத்தில் ராமன் 17 லட்சம் ஆண்டுக்கு முன் பிறந்ததாக கூறப்பட்டுள்ளது. அப்படி இருக்கும் போது ராமர் எவ்வாறு அந்த பாலத்தை கட்டியிருக்க முடியும் என பாலு கேள்வி எழுப்பினார்.
மதசார்பற்ற ஐக்கிய ஜனநாயக முன்னணி இந்துக்களின் மனதை புண்படுத்தும் செயல்களில் ஈடுபடாது என்றார்.
-
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications