பிளஸ் டூ: முதலிடம் பெற்ற மாணவர்களுக்குபரிசு - கல்விச் செலவை அரசு ஏற்றது
சென்னை: பிளஸ் டூ தேர்வில் மாநிலத்தில் முதல் மூன்று இடங்களில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு முதல்வர் கருணாநிதி பரிசுகள் வழங்கினார். அவர்களின் உயர் கல்வி செலவுகளை அரசே ஏற்கும் எனவும் அறிவித்தார்.
பிளஸ் டூவில் தமிழை ஒரு பாடமாகக் கொண்டு மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவியருக்கு அரசு பரிசு வழங்கிப் பாராட்டி கெளரவித்து வருகிறது.
![]() |
அதன்படி இந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியர் தலைமைச் செயலகத்தில் முதல்வர் கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றனர்.
முதலிடம் பெற்ற சென்னை டி.ஏ.வி. பள்ளியைச் சேர்ந்த மாணவி ரம்யாவுக்கு ரூ. 15 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. அதே பள்ளியைச் சேர்ந்த 2வது இடம் பிடித்த ரூபிகாவுக்கு ரூ. 12 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
3வது இடம் பிடித்த திருப்பூர் ஜெயமோகன், நாமக்கல் நிவேதிதா, ராசிபுரம் இளவரசன், ராசிபுரம் கீர்த்தனா ஆகியோருக்கு தலா ரூ. 10 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது.
இந்த மாணவ, மாணவியரின் உயர் படிப்புக்கான செலவுகளையும் மாநில அரசே ஏற்றுக் கொண்டுள்ளது. இந்தத் திட்டம் கடந்த 1996ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பரிசுத் தொகை வழங்கிய முதல்வருக்கு மாணவ, மாணவியர் நன்றி தெரிவித்தனர். மாணவி நிவேதிதா, முதல்வருக்கு ராஜாஜி எழுதிய சத்யமேவ ஜெயதே என்ற நூலின் பிரதிகளை அன்பளிப்பாக கொடுத்தார். அதைப் பெற்றுக் கொண்ட முதல்வர் அவருக்கு நன்றி தெரிவித்தார்.
அதேபோல கோபாலபுரம் டி.ஏ.வி. பள்ளி மாணவிகள் ரம்யாவும், ரூபிகாவும் பரிசு பெற வந்தபோது கோபாலபுரமா என்று சந்தோஷமா கேட்டார். முதல்வர் வீடு கோபாலபுரத்தில் உள்ளது என்பதால் தனது பகுதியைச் சேர்ந்த மாணவிகள் முதலிடம் பெற்ற சந்தோஷத்தில் அப்படிக் கேட்டார் முதல்வர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு













Click it and Unblock the Notifications