ஓட்டிக் கொண்டே பேச்சு: டிரைவிங் லைசன்ஸ் ரத்து
தென்காசி:செல்போனில் பேசியபடி மோட்டார் சைக்கிளில் சென்றவரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டது.
செல்போனில் பேசியபடி வாகனங்கள் ஓட்டக்கூடாது, மீறினால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த உத்தரவின்படி முதல் முறையாக நெல்லை மாவட்டம் தென்காசியில் ஒருவரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தென்காசி டிஎஸ்பி மயிலவாகனன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தென்காசியில் செல்போனில் பேசியபடி இருசக்கர வாகனம் ஓட்டியது தொடர்பாக 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, இதில் 4 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டது.
அதில் ஆயக்குடியை சேர்ந்த ரமேஷ்குமார் (27) என்பவரின் ஓட்டுனர் உரிமம் முதலில் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றார்.
இதேபோல கடந்த ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக 198 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில், 17 பேரின் ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன என்றும் அவர் தெரிவித்தார்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications