மும்பை: தமிழர்களின் தாராவி மாறுகிறது-குடிசைகளுக்குப் பதில் அடுக்கு மாடி வீடுகள்
மும்பை:தமிழர்கள் அதிகம் வசிக்கும், ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியாக வர்ணிக்கப்படும் மும்பையின் தாராவி பகுதியில் உள்ள குடிசைகளை அகற்றி விட்டு அங்கு வசிப்பவர்களுக்கு அடுக்கு மாடிக் குடியிருப்புகளைக் கட்டித் தர மகாராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளது.
மும்பை மாநகரின் மையப் பகுதியில் உள்ள இடம்தான் தாராவி. முழுக்க முழுக்க குடிசைகள் நிரம்பிய தாராவியில், கிட்டத்தட்ட 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியாக இது கருதப்படுகிறது. இங்கு வசிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள்தான். அவர்களில் திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்தான் அதிகம்.
மும்பை மாநகரம் பெரும் வளர்ச்சியைக் கண்டு இந்தியாவின் வர்த்தகத் தலைநகராக விளங்கி வந்தபோதிலும், தாராவி பகுதி மட்டும் ஆதி காலத்திலிருந்து அப்படியேதான் இருந்து வருகிறது.
தாராவி பகுதியை சீரமைக்க பல திட்டங்களைப் போட்டும் எதுவும் செயல்பாட்டுக்கு வரவில்லை. இந்த நிலையில் தாராவி பகுதியை முற்றிலும் சீரமைக்க மகாராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான புதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டது. உடனடியாக இந்தத் திட்டத்தை செயல்படுத்தவும் அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி 223 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள தாராவியில், குடிசை வீடுகள் அனைத்தும் அகற்றப்பட்டு அடுக்கு மாடி வீடுகள் கட்டித் தரப்படும். ஒவ்வொரு வீடும் 225 சதுர அடியில் இருக்கும். படிப்படியாக இந்த வீடு கட்டும் திட்டம் அமல்படுத்தப்படும்.
தற்போது குடிசையில் வசிப்பவர்கள் இந்த வீடுகளில் குடியமர்த்தப்படுவர். தாரவியில் வீடுகள் மட்டுமல்லாமல் ஏராளமான தோல் பதனிடும் தொழிற்சாலைகளும் உள்ளன. அவற்றுக்கும் புதிய திட்டத்தின் கீழ் இடம் ஒதுக்கீடு செய்யப்படும்.
இந்தத் திட்டத்தின் மூலம் தாராவி முற்றிலும் நவீனமான பகுதியாக மாறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications