நெல்லையில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா17ம் தேதி கருணாநிதி அடிக்கல்
திருநெல்வேலி:திருநெல்வேலி அருகே கங்கைகொண்டான் என்ற இடத்தில் ரூ. 300 கோடி மதிப்பீட்டில், 500 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படவுள்ள தகவல் தொழில்நுட்பப் பூங்காவுக்கு வருகிற 17ம் தேதி முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்டுகிறார்.
சென்னையைப் போலவே தமிழகத்தின் பிற மாநகரங்களான மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை ஆகிய ஊர்களிலும் தகவல் தொழில்நுட்ப்ப பூங்காக்களை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
கோவையில் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. அடுத்து மதுரை, திருச்சி, லை ஆகிய நகரங்களில் தகவல் தொழில்நுட்பப் பூங்காவுக்கான பூர்வாங்க பணிகள் தொடங்கியுள்ளன.
இந்த நிலையில் நெல்லை அருகே உள்ள கங்கை கொண்டானில் 500 ஏக்கர் பரப்பளவில், ரூ. 300 கோடி முதலீட்டில், தகவல் தொழில்நுட்பப் பூங்காவை அமைக்க தமிழக அரசின் எல்காட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இந்த வளாகத்திற்கான அடிக்கல் நாட்டு விழா வருகிற 17ம் தேதி நடைபெறுகிறது. இதில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார்.
அன்றைய தினம் பாளையங்கோட்டையில் உள்ள நெல்லை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் விழாவில் தகவல் தொழில்நுட்பப் பூங்காவுக்கான அடிக்கல்லை முதல்வர் நாட்டுகிறார்.












Click it and Unblock the Notifications