தேர்தல் ஆணையம் மீது கருணாநிதி சந்தேகம்
சென்னை:தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை சம்புகன் மட்டும்தான் தவறு செய்யக் கூடாது என்று கருதும் ராமனின் நடவடிக்கை போல இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. சந்தேகத்தை போக்க வேண்டிய கடமை தேர்தல் ஆணையத்திற்கு உண்டு. ஆணையம் ஜெயலலிதா மீது நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது
நேற்று நடந்த கூட்டத்தில் குடியரசு தலைவராக ஒரு பெண்மணியை தேர்வு செய்தோம். அப்போது நான் சோனியாவிடம் இந்த அறிவிப்பும், இந்த வெற்றியும் 33 சதவீத மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆரம்பமாக இருக்கட்டும் என்றேன். அதை அவரும் ஏற்றுக் கொண்டு வெற்றி நமதே என தமிழில் முழுக்கமிட்டார்.
மகளிர் இடஒதுக்கீடு நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்படுவதற்கு இது ஒரு ஆரம்பமாக இருக்கும்.
ஜனாதிபதி துணை தலைவர் பற்றி பேசினீர்களா?
துணைக்கு அப்புறம் வருவோம். இந்த வேட்பாளர் நியமனத்தை மகளிர் எந்த அளவிற்கு ஆதரித்து வரவேற்கின்றனர் என்பதை எடுத்துக்காட்ட ஒவ்வொரு மாநில தலைநகரங்களிலும் ஜூலை முதல் தேதி மகளிர் ஊர்வலம், கூட்டங்கள், மகளிரே கலந்து கொள்ளும் வகையில் நடத்த வேண்டும் என அறிவித்தேன்.
அனைத்து கட்சி மகளிரும் கலந்துக் கொள்ளும் வகையில் இந்த பேரணி சென்னையில் ஜூலை 1ம் தேதி நடக்கும். மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும், மகளிர் வேட்பாளருக்கு போட்டியின்றி அனைத்துக் கட்சிகளும் விட்டுத் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாகவும் பேரணி அமையும்.
பிரதீபா பாட்டீலுக்கு பாஜகவின் ஆதரவு கோருவதில் மிகவும் தாமதம் ஏற்பட்டுவிட்டதாக வாஜ்பாய் கூறியிருக்கிறாரே?
அழைப்பு விடுத்து ஆதரவு கேட்கும் நாகரீகத்தை நாங்கள் கடைப்பிடித்தோம். தாமதமான அழைப்பு என்பது சரியான காரணமாகவோ, சாக்கு போக்காகவோ இருந்தாலும் எதுவும் சொல்வதாக இல்லை.
3 வது அணி சார்பில் பெண் வேட்பாளர் நிறுத்தப்பட்டால்?
நீங்கள் கேள்விப்பட்டீர்களா?
பெண் என்பதால் பிரதீபாவுக்கு ஜெயலலிதா ஆதரவு தருவாரா?
எல்லாமே நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது.
திமுகவிற்கு மத்திய அமைச்சரவையில் மேலும் ஒரு இடம் கிடைக்குமா?
கோரிக்கை எதுவும் வைக்கவில்லை.
திமுகவிற்கு குடியரசு துணைத் தலைவர் பதவி ஒதுக்கப்படுமா?
குடியரசுத் தலைவர் தேர்தல் முடிந்த பிறகு அது பற்றி பேசலாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
4 தொகுதிகளில் மனுத் தாக்கல் செய்து சட்டத்தை மீறிய ஜெயலலிதா மீது நடவடிக்கை எடுக்காத தேர்தல் ஆணையம் மீது வழக்கு தொடரப்படுமா?
தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க தவறாது என்று நம்புகிறோம். ஆனால் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை சம்புகன் மட்டும்தான் தவறு செய்யக் கூடாது என்று கருதும் ராமன் நடவடிக்கை போல இருக்கிறதா என சந்தேகம் எழுகிறது. சந்தேகத்தை போக்க வேண்டிய கடமை தேர்தல் ஆணையத்திற்கும் நிச்சயம் உண்டு.
எவ்வளவோ பிரச்சனை இருக்கும் போது கொடநாடு பற்றி பேசலாமா என ஜெயலலிதா கூறுவது குறித்து?
நீங்கள் புரிந்து கொண்டால் சரி.
மதுரை மேற்கு தொகுதி பிரச்சாரத்திற்கு எப்போது செல்கிறீர்கள்?
அங்கு 23ம் தேதி பிரச்சாரம் செய்வேன் என்றார் கருணாநிதி.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications