கர்நாடகத்திலும் மாவோயிஸ்டுகள் அட்டகாசம்:அரசு பஸ் தீவைத்து எரிப்பு
ஷிமோகா:
கர்நாடக மாநிலம் ஹொசகட்டே என்ற இடத்தில் மாவோயிஸ்ட் நக்சலைட் தீவிரவாதிகள் அரசுப் பேருந்தை தீவைத்துக் கொளுத்தினர்.
இன்று அதிகாலை ஷிமோகா மாவட்டம் ஆகும்பே என்ற இடத்திலிருந்து சிக்மகளூருக்கு அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது ஹொசகட்டே- தல்லூரங்கடி வனப் பகுதியில், அந்தப் பேருந்தை எட்டு பேர் கொண்ட மாவோ நக்சலைட் கும்பல் தடுத்து நிறுத்தியது.
பின்னர் பேருந்து இயக்குநர், நடத்துனர் மற்றும் பயணிகளை கீழே இறங்குமாறு உத்தரவிட்டனர். அனைவரும் இறங்கிய பின்னர் பேருந்துக்கு தீவைத்துக் கொளுத்தினர்.
கர்நாடக அரசை எதிர்த்து அப்போது நக்சலைட்டுகள் கோஷமிட்டனர். மேலும், நக்சலைட்டுகள் குறித்து சமீபத்தில் கர்நாடக அரசு வெளியிட்ட பட்டியலுக்கும் நக்சலைட்டுகள் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.
இந்த தாக்குதலை அதே பேருந்தில் வந்த பி.ஜி.கிருஷ்ணமூர்த்தி, பிரபா ஆகியோர்தான் தலைமை தாங்கி நடத்தியதாக கூறப்படுகிறது. கிருஷ்ணமூர்த்தி ஹொசகட்டேவைச் சேர்ந்தவர், பிரபா சிருங்கேரியைச் சேர்ந்தவர்.
இந்த சம்பவத்திற்கு கர்நாடக துணை முதல்வர் எடியூரப்பா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபோன்ற வெறிச் செயலுக்கு நக்சலைட்டுகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் படித்த மேதாவிகள் கண்டனம் தெரிவிப்பார்கள், ஆதரிக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன் என்று கூறினார் எடியூரப்பா.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications