சிவகங்கை குண்டு வெடிப்பு: தொடர்ந்துபோராட்டம்-ஆயுத போலீஸ் குவிப்பு
சிவகங்கை:சிவகங்கையில் நகராட்சி தலைவரை காரில் குண்டு வைத்து கொன்றவர்களை கைது செய்யக் கோரி அவருடைய ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். பேருந்து மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சிவகங்கை நகராட்சி தலைவர் முருகன் கடந்த 29ம் தேதி காரில் குண்டு வைக்கப்பட்டு கொல்லப்பட்டார். இது தொடர்பாக போலீஸார் 2 திமுக கவுன்சிலர்கள் மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். மேலும் குண்டு தயாரித்து கொடுத்து பாலா என்கிற என்ஜீனியரையும் தேடி வந்தனர்.
இந் நிலையில் திமுக கவுன்சிலர் மந்தகாளையும், என்ஜீனியர் பாலாவும் குளித்தலை நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இவர்கள் 6ம் தேதி சிவகங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இதற்கிடையில் முருகனின் ஆதரவாளர்கள் மற்ற கொலையாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை-மானாமதுரை சாலையில் இன்று காலை நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கூடி கொலையாளிகளை கைது செய்யக் கோரி கோஷமிட்டப்படி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இத்தகவலை அறிந்த சிவகங்கை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம், குற்றவாளிகளை பிடிக்க தனிப் படைகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும், விரைவில் அவர்கள் பிடிபடுவர் எனவும் சமாதானப்படுத்தினர்.
பின்னர் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் ஆயுதம் ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications