முன்னாள் பிரதமர் சந்திரசேகர் மரணம்
டெல்லி:முன்னாள் பிரதமர் சந்திரசேகர் இன்று காலை டெல்லியில் மரணமடைந்தார். அவருக்கு வயது 80.
கடந்த 1990ம் ஆண்டு நவம்பர் 10ம் தேதி இந்தியாவின் 11வது பிரதமராக பதவியேற்றவர் சந்திரசேகர். 1991ம் ஆண்டு ஜூன் 21ம் தேதி வரை இப்பதவியில் இருந்தார்.
80 வயதாகும் சந்திரசேகருக்கு புற்று நோய் வந்து மிகவும் அவதிப்பட்டு வந்தார். இதுதொடர்பாக தீவிர சிகிச்சையும் எடுத்து வந்தார். கடந்த 3 மாதங்களாக டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் சந்திரசேகர்.
![]() |
நேற்று பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவனைக்குச் சென்று சந்திரசேகர் உடல் நலம் குறித்து மருத்துவர்களிடம் விசாரித்தார். நேற்று இரவு சந்திரசேகரின் நிலை கவலைக்கிடமானது.
இந்த நிலையில், இன்று காலை 8.30 மணிக்கு சிகிச்சை பலனின்றி சந்திரசேகர் மரணமடைந்தார். அவரது உடல் தகனம் நாளை நடைபெறுகிறது.
காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் 1990ம் ஆண்டு பிரதமராகப் பதவியேற்றார் சந்திரசேகர். இருப்பினும் இவரது ஆட்சி ஒரு வருடம் கூட நீடிக்கவில்லை.
ஜெயலலிதாவும் ராஜிவ் காந்தியும் இணைந்து சந்திரசேகருக்கு நெருக்கடி தந்து திமுக ஆட்சியைக் கலைத்த சம்பவமும் நடந்தது. திமுக ஆட்சியை சந்திரசேகர் கலைத்த விதம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது நினைவிருக்கலாம். ஆளுநரின் அறிக்கையைக் கூட பெறாமல் சந்திரசேகர் திமுக ஆட்சியைக் கலைக்க உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சந்திரசேகரின் பதவிக்காலத்தின்போதுதான் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டுக்குப் பலியானார். இதைத் தொடர்ந்து திமுக ஆட்சியை கலைத்தார் சந்திரசேகர்.
சந்திரசேகர், உ.பி. மாநிலம் பாலியா தொகுதியிலிருந்து 8 முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1995ம் ஆண்டு சிறந்த நாடாளுமன்றவாதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சந்திரேசகர் மறைவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சோஷலிச வீரர் ..
1927ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி உ.பி. மாநிலம் பாலியா மாவட்டத்தில் உள்ள குக்கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் சந்திரசேகர்.
மாணவர் பருவத்திலேயே தீவிர அரசியலில் ஈடுபட்டார். சோஷலிச கருத்துக்களால் கவரப்பட்ட அவர் பிரஜா சோஷலிச கட்சியில் இணைந்து செயல்பட்டார்.
1962ம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து தீவிரமாக செயல்பட்டார். தனது முற்போக்குப் பேச்சால் இளம் துருக்கியர் என்று அழைக்கப்பட்டார்.
பின்னர் ஜெயப்பிரகாஷ் நாராயணனுடன் இணைந்து காங்கிரஸ் கட்சியுடன் முரண்பாடு கொண்டார் சந்திரசேகர். பின்னர் அவசர நிலை சட்டம் பிறப்பிக்கப்பட்டபோது அதன் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சந்திரசேகர் பிரதமராக இருந்தபோதுதான் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து தமிழகத்தில் அப்போது ஆட்சிப் பொறுப்பில் இருந்த திமுக அரசைக் கலைத்தார் சந்திரசேகர். அது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
கடந்த சில வருடங்களாக தீவிர அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கியிருந்தார் சந்திரசேகர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications