நட்சத்திர ஹோட்டலில் பெண் மீது கை வைத்தபெங்களூர் சாப்ட்வேர் என்ஜீனியர் கைது!
சென்னை:நட்சத்திர ஹோட்டல் பாரில் கணவருடன் டான்ஸ் ஆடிய பெண்ணைப் பார்த்து காமவெறி தலைக்கேறிய பெங்களூரைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜீனியர் அந்தப் பெண்ணை இடித்தும், உரசியும், ஒரு கட்டத்தில் முத்தமிட்டும் ரகளை செய்து தர்ம அடி வாங்கி கைதானார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் வார இறுதி நாட்களில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் தூள் பறக்கும். மது விருந்துடன், ஜோடி ஜோடியாக பலரும் அங்குள்ள நடன அரங்கில் ஆடு மகிழ்வர், மேல் தட்டு வர்க்கத்தினர்.
சில நாட்களுக்கு முன்பும் இப்படி ஒரு ஆடல், பாடல் விருந்து களை கட்டியிருந்தது. மெல்லிய விளக்கொளியில் ஏராளமான ஜோடிகள் தன்னிலை மறந்து தாறுமாறாக ஆடிக் கொண்டிருந்தனர்.
ஆனால் ஒரே ஒரு இளைஞர் மட்டும் தன்னந்தனியாக அமர்ந்து மதுவை பருகிக் கொண்டிருந்தார். அவருடன் பெண் யாரும் வரவில்லை. (வழக்கமாக ஜோடியில்லாமல் வரும் தனி ஆட்களை உள்ளே விட மாட்டார்கள். இவர் எப்படி வந்தாரோ தெரியவில்லை).
இதனால் ஆடிக் கொண்டிருந்த ஜோடிகளை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார் அந்த வாலிபர்.
ஆடிக் கொண்டிருந்த பெண்களில் பெரும்பான்மையானோரின் ஆடைகள் உடலில் இல்லை. அவை உடலை விட்டு நழுவியபடி இருந்தன.
இந்த அலங்கோலங்களை ரசிக்க ஆரம்பித்த வாலிபருக்க ஒரு கட்டத்தில் பொறுக்க முடியவில்லை. குடித்துக் கொண்டிருந்த கிளாஸை வைத்து விட்டு கூட்டத்திற்குள் புகுந்தார்.
தன்னிலை மறந்து ஆடிக் கொண்டிருந்த பெண்களை உரசியபடியே அங்குமிங்கும் உலவ ஆரம்பித்தார். இதுபோன்ற ஆட்ட அரங்கில், ஒருவருக்கொருவர் உரசிக் கொள்வதும், இடித்துக் கொள்வதும் சகஜம்தான் என்பதால், இடிபட்ட பெண்கள் அந்த வாலிபரை தவறாக எடுத்துக் கொள்ளவில்லை.
இதையடுத்து உற்சாகம் கூடிப் போன அவர், படு வேகமாக இடிக்கத் தொடங்கினார்.
அப்போது கணவருடன் ஆடிக் கொண்டிருந்த ஒரு பெண்ணைப் பார்த்ததும் அவருக்கு காம வெறி உச்சந்தலைக்குப் போனது. காரணம் அந்தப் பெண்ணின் அழகும், அலங்கோல உடையும்.
அந்தப் பெண் பிரெஞ்சு மொழி கற்பிக்கும் ஆசிரியை. போயஸ் கார்டனில் தனது கணவர் ஜியோ டாங்குடன் வசித்து வருகிறார். அவரை நெருங்கிய அவர் கையைப் பிடித்து தன் பக்கம் இழுத்து அணைத்தார். பின்னர் வெறியேறிப் போய், உதடுகளில் முத்தமிட்டார்.
இதைப் பார்த்தும் அந்தப் பெண் அலறினார். இதையடுத்து ஆடிக் கொண்டிருந்தவர்கள் ஆட்டத்தை நிறுத்தி விட்டு அந்த வாலிபர் மீது பாய்ந்தனர்.
சரமாரியாக அவருக்கு தர்ம அடி கொடுத்தனர். ஹோட்டல் பாதுகாவலர்களும் சேர்ந்து கொண்டு மொத்தினர். இதனால் அவர் வலி தாங்க முடியாமல் அலறினார்.
பின்னர் போலீஸார் வரவழைக்கப்பட்டு அவரிடம் அந்த வாலிபர் ஒப்படைக்கப்பட்டார். போலீஸ் விசாரணையில், அவரது பெயர் விஸ்வேஸ்வரன் என்பதும், பெங்களூரைச் சேர்ந்த அவர் ஒரு சாப்ட்வேர் என்ஜீனியர் என்பதும் தெரிய வந்தது.
இவருக்குக் கல்யாணமாகி விட்டது. மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் சென்னைக்கு வந்து இங்குள்ள ஹோட்டலில் தங்கியிருக்கிறார்.
சம்பவத்தன்று மனம் வெறுத்த நிலையில் பாருக்கு வந்துள்ளார்.
விஸ்வேஸ்வரனை போலீஸார் கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications