நாடு திரும்ப நவாஸ் ஷெரீப் தீவிரம்!
இஸ்லாமாபாத்:மீண்டும் பாகிஸ்தான் திரும்ப அனுமதி கோரி அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் முஷாரப்பால் நாடு கடத்தப்பட்ட முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும், அவரது சகோதரர் ஷாபாஸ் ஷெரீப்பும் வழக்கு தொடரவுள்ளனர்.
கடந்த 1999ம் ஆண்டு அக்டோபர் மாதம் ரத்தம் சிந்தாத ராணுவப் புரட்சியின் மூலம் நவாஸ் ஆட்சியைக் கவிழ்த்தார் ராணுவ தளபதியாக இருந்த பெர்வேஸ் முஷாரப். அதன் பின்னர் 2000மாவது ஆண்டு டிசம்பர் மாதம் நவாஸை சவூதி அரேபியாவுக்கு நாடு கடத்தினார்.
தற்போது நவாஸ் ஷெரீப் லண்டனில் வசித்து வருகிறார். தற்போது பாகிஸ்தானில் முஷாரப்புக்கு எதிரான அலை பலமாக வீசி வருகிறது. அவரால் டிஸ்மிஸ் செய்யப்பட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இப்திகார் செளத்ரி மீண்டும் பதவிக்குத் திரும்பியுள்ளார்.
இந்த நிலையில், மீண்டும் நாடு திரும்ப உச்சநீதிமன்றத்தை அணுக ஷெரீப் சகோதரர்கள் முடிவு செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து இதுதொடர்பான மனுவை முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பக்ருதீன் இப்ராகிம், ஷெரீப் சகோதரரர்கள் சார்பில் தாக்கல் செய்யவுள்ளார்.
இதுகுறித்து இப்ராகிம் கூறுகையில், சமீபத்தில் லண்டன் சென்றபோது நவாஸ் ஷெரீப்பையும், ஷாபாஸ் ஷெரீப்பையும் சந்தித்துப் பேசினேன். தாங்கள் பாகிஸ்தானுக்கு மீண்டும் திரும்புவதற்கு வசதியாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யுமாறு அப்போது அவர்கள் அறிவுறுத்தினர். அதன்படி மனு தாக்கல் செய்யப்படும் என்றார்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications