லண்டன் லிங்கன்-இன் அமைப்பின் உறுப்பினராகதலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் நியமனம்
டெல்லி: லண்டனில் உள்ள புகழ் பெற்ற லிங்கன்-இன் அமைப்பின் கெளரவ உறுப்பினராக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தில் உள்ள இன்னர் டெம்பிள், லிங்கன்-இன், கிரேஸ்-இன், மிடில் டெம்பிள் ஆகிய 4 அமைப்புகளும் மிகவும் புகழ் பெற்றவை ஆகும். இந்த அமைப்புகளில் சட்ட நிபுணர்கள் மட்டுமே உறுப்பினர்களாக இருப்பார்கள்.
![]() |
இந்தியர்களும் அவ்வப்போது இதில் இடம் பெறுவது வழக்கம். தற்போது அந்தப் பெருமை தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனுக்குக் கிடைத்துள்ளது.
இதில் லிங்கன்-இன் அமைப்பின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார் பாலகிருஷ்ணன். இந்த அமைப்பில் கெளரவ உறுப்பினராக சேரும் 3வது இந்தியர் என்ற பெருமை பாலகிருஷ்ணனுக்குக் கிடைத்துள்ளது.
இவர் தவிர உச்சநீதிமன்ற நீதிபதி சுஜாதா வி.மனோகர், அட்டர்னி ஜெனரல் மிலன் கே.பானர்ஜி ஆகியோரும் இந்த அமைப்பின் கெளவர உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் லண்டன் சென்றிருந்த கே.ஜி.பாலகிருஷ்ணன், லிங்கன்-இன் அமைப்பில் நீதித்துறையின் சுதந்திரம் என்ற பெயரில் உரை நிகழ்த்தினார்.
தற்போது அந்த அமைப்பின் கெளரவ உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?













Click it and Unblock the Notifications