எலியால் நின்ற கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்!
நாகர்கோவில்:ரயில் பெட்டிக்குள் எலி புகுந்ததால் கடுப்பான பயணி, அபாயச் சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினார்.
கன்னியாகுமரியிலிருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மாலை வழக்கம் போல நாகர்கோவில் ரயில் நிலையத்திலிருந்து கிளம்பியது.
ரயில் கிளம்பிய சிறிது நேரத்திலேயே ரயில் நின்றது. இதனால் பயணிகள் குழம்பினர். பிறகுதான் தெரிந்தது யாரோ ஒரு பயணி அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தியது.
சம்பந்தப்பட்ட பெட்டிக்கு ரயில் டிரைவர் மற்றும் அதிகாரிகள் சென்றனர். யார் சங்கிலியைப் பிடித்து இழுத்து நிறுத்தியது, ஏன் என்று அதிகாரிகள் விசாரித்தனர்.
அப்போது ஒரு பயணி குறுக்கிட்டு நான்தான் நிறுத்தினேன். எனது பெர்த்துக்குக் கீழே ஒரு எலி சிக்கிக் கொண்டுள்ளது. அதை எடுத்து வெளியே விட்டால்தான் ரயில் புறப்பட அனுமதிப்பேன் என்றார் கோபமாக.
இதையடுத்து ஊழியர்கள் அந்தப் பகுதியில் பார்த்தபோது, அங்கு ஒரு எலி பசை போன்ற ஒன்றில் சிக்கித் தவித்தது தெரிய வந்தது. எலியைப் பிடிப்பதற்காக ரயில்வே ஊழியர்கள் ஒட்டியிருந்த பசைதான் அது. அதில்தான் அந்த எலி சிக்கியுள்ளது.
இதையடுத்து எலியைப் பிடித்து வெளியே விட்டனர். அதன் பின்னர் அந்தப் பயணி திருப்தி அடைந்தார். இதைத் தொடர்ந்து ரயில் மீண்டும் சென்னைக்குக் கிளம்பியது.
எலி பிடிக்க பசையை ஒட்டிய புண்ணியவான்கள், அதில் ஏதேனும் எலி சிக்கியுள்ளதா என்பதையும் முறையாக பரிசோதித்திருந்தால் இந்த தாமதம் ஏற்பட்டிருக்காது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications