பழனி கோவிலில் அங்கப்பிரதட்சணம் செய்யரூ.1.75 கோடியில் கிரனைட் தளம்
Subscribe to Oneindia Tamil
பழனி:பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் அங்கப் பிரதட்சணம் செய்ய வசதியாக கிரானைட் தளம் அமைக்கப்படவுள்ளது.
பழனி முருகன் கோவிலுக்கு பல லட்சம் பக்தர்கள் வருகின்றனர். அதில் பலர் அங்கப் பிரதட்சணமும் செய்கின்றனர். இவர்களது வசதிக்காக கோவில் நிர்வாகம் ரூ.1.75 கோடியில் கிரானைட் தளம் அமைக்க முடிவு செய்துள்ளது.
அதே போல பழனி அடிவாரம் கிரி வீதியில் உள்ள வன துர்க்கை கோவிலுக்கு ரூ.8 லட்சம் செலவில் கும்பாபிஷேகம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பணியாளர்கள் 68 பேருக்கு பதவி உயர்வு வழங்க பரிந்துரைப்பது என்றும் அறங்காவலர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இக் கூட்டத்தில் அறங்காவலர் குழ தலைவர் பாலசுப்பிரமணியன்,இனை ஆணையர் ராஐமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications