சிங்கள கும்பல் சுட்டு 2 தமிழர்கள் சாவு:தமிழர்களின் வீடுகளும் சூறை

Subscribe to Oneindia Tamil

வவுனியா:வவுனியா மாவட்டம் வீராபுரம் என்ற இடத்தில் இரண்டு அப்பாவித் தமிழர்களை சிங்கள வெறிக் கும்பல் கடுமையாகத் தாக்கியும் சுட்டும் படுகொலை செய்துள்ளது.

இத் தாக்குதலில் பெண்கள் உள்ளிட்ட பலர் இதில் படுகாயமடைந்தனர். தமிழர்களின் வீடுகளையும் சிங்கள வெறிக் கும்பல் சூறையாடியது.

கடந்த 20ம் தேதி இந்த அட்டூழியம் நடந்துள்ளது. கடந்த 20ம் தேதி சிங்கள வெறிக் கும்பல் வீராபுரத்திற்குள் ஊடுறுவியது. இவர்கள் சிங்கள ஊர்க்காவல் படையைச் சேர்ந்தவர்கள். அதாவது இலங்கை ராணுவத்தால் ஆயுதப் பயிற்சி அளிக்கப்பட்ட சிங்களர்கள் இவர்கள்.

இந்தக் கும்பல், அங்குள்ள வீராபுரம் ஊரக வளர்ச்சிக் கழக முன்னாள் தலைவர் ஆறுமுகம் நாகலிங்கத்தை (55) கடுமையாக தாக்கியும், துப்பாக்கியால் சுட்டும் கொன்றனர்.

அதேபோல, இலங்கை போக்குவரத்து வாரிய ஓட்டுநர் செந்தில்நாதன் (35) என்பவரையும் இந்தக் கும்பல் சுட்டுக் ெகான்றது.

இதுதவிர தமிழர்களின் வீடுகளையும் இந்த வெறிக் கும்பல் சூறையாடியது. இதுதவிர செட்டிக்குளம் பகுதியில் இலங்கை ராணுவத்தினரும் தமிழர்களின் வீடுகளை சூறையாடினர். இந்தத் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட பலர் படுகாயமடைந்தனர்.

இலங்கை ராணுவம் மற்றும் ஊர்க்காவல் படை என்ற பெயரிலான சிங்களக் கும்பலின் தொடர் தாக்குதலால் இங்கு வசிக்கும் தமிழர்கள் வேறு பகுதிகளுக்கு இடம் பெயரத் தொடங்கியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+