Rasi Palan This Week: கடக ராசிக்கு நல்ல நேரம் ஆரம்பம்.. தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்
Weekly Rasi Palan: ஜூலை 20 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி (ஆடி 4 முதல் 10 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் கடக ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரிய பகவான் கடக ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆடி மாதமாகும். ஜூலை 17 ஆம் தேதியான நேற்று ஆடி மாதம் பிறந்துள்ளது. அம்மனுக்கு உகந்த மாதமான இந்த ஆடி மாதத்தில் பல்வேறு முக்கய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், ஜூலை 20 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி (ஆடி 4 முதல் 10 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் கடக ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
கடக ராசி பலன்
கடக ராசி, லக்கினம் சார்ந்த நபர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். தைரியம், தன்னம்பிக்கை, அசாத்தியமான வலிமை உண்டாகும். நினைத்த காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். காதல் கைகூடும். பணம், பொருளின் மேல் ஆசை அதிகரிக்கும். காதல் திருமணம் நடக்கக்கூடிய யோகம் உண்டாகும்.
அனுகூலம்
மேலதிகாரிகள் மற்றும் சட்டத்திற்குப் புறம்பான விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் கோபத்தை தவிர்த்து இணக்கமாகச் செல்வது நல்லது. பிள்ளைகள் விஷயத்தில் அனுகூலம் காணப்படும். துணை விஷயத்தில் ஏற்றம் ஏற்படும். உறவுகளில் மேன்மை, சந்தோஷம் ஏற்படும். எல்லா விதமான சந்தோஷங்களும் கிடைக்கும். உத்தியோக ரீதியாக இருந்து வந்த சங்கடங்கள் நிவர்த்தியாகும்.
கஷ்டம் தீரும்
வியாபாரத்தில் இருந்து வந்த கஷ்டங்கள் தீரும். தொழில் ரீதியாக நிறைய முன்னேற்றங்கள் காணப்படும். அடுத்தடுத்து நல்ல விஷயங்கள் நடக்கும். தொழில், உத்தியோகம், வியாபாரம் ரீதியாக அனுகூலம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வார்த்தைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். எதைப் பேசினாலும், ஒருமுறைக்கு இருமுறை யோசித்து பேசுவது நல்லது.
வழிபாடு
திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறுவீகர்கள். பொருளாதாரத்தில் ஏற்றம் ஏற்படும். நல்ல வரன்கள் அமையும். வெளியூர், வெளிநாடு போகும் அமைப்பு ஏற்படும். பெரிய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். மகிழ்ச்சி நிறைந்த வாரமாக இருக்கும். லட்சுமி நாராயணர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 90 சதவீதம் நன்றாக இருக்கும்.












Click it and Unblock the Notifications