வேலையில்லா பட்டதாரிகளுக்கு சிறப்பு பயிற்சி
சென்னை:வேலை வாய்ப்பில்லாத இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு அரசு வழங்கி வரும் வேலை வாய்ப்பு நிவாரண உதவித் தொகை பெறுபவர்களுக்கு வேலைவாய்ப்பு சிறப்பு திறன் பயிற்சி கொடுக்கவுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயா அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுபவர்களுக்கு மாநிலம் முழுவதும் 50 ஆயிரம் பேருக்கு மத்திய அரசு உதவியுடன் வேலைவாய்ப்பு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. சென்னை மாவட்டத்திலும் இந்த திட்டம் செயல்படுத்தவுள்ளது.
இந்த பயிற்சியில் சேர விரும்புவோர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தங்கள் பதிவை தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும். கல்வித் தகுதி 10 அல்லது 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
வேலை வாய்ப்பற்றோர் உதவி தொகை பெறுபவர்கள் மட்டும்தான் இதில் கலந்து கொள்ள முடியும். இதில் கலந்து கொள்ள எஸ்.சி, எஸ்.டி இனத்தவர்களுக்கு அதிக பட்ச வயது வரம்பு 45 ஆகும்.
இந்த பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு, அரசு ஐடிஐ-ல் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை பயிற்சி கொடுக்கப்படும்.
தேர்ந்தெடுக்கும் பயிற்சிக்கு ஏற்ப தினமும் 3 மணி நேரம் வீதம் மொத்தம் 60 மணி நேரத்திலிருந்து 320 மணி நேரம் வரை பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின் முடிவில் அரசு சான்றிதழ் கொடுக்கப்படும். இந்த பயிற்சியில் சேருபவர்கள் எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.
இந்த பயிற்சியில் சேருபவர்களுக்கு வேலைவாய்ப்பு உதவித் தொகை தொடர்ந்து கொடுக்கப்படும். வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வரும் வேலை வாய்ப்பும் பாதிக்கப்படாது.
இந்த பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள் மற்றும் வேலை வாய்ப்பு நிவாரண உதவி தொகை பெறுவதற்கான ஆதாரங்களோடு வரும் ஆகஸ்ட் 23 மற்றும் 24ம் தேதிகளில் காலை 11 மணிக்கு கிண்டியில் உள்ள அரசினர் ஐடிஐயில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலரை தொடர்பு கொள்ள வேண்டும் என்று கலெக்டர் ஜெயா கூறியுள்ளார்.
-
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications