தீண்டாமையைத் தடுக்க பாடுபடுபவர்களுக்கு தேசிய விருது
டெல்லி:தீண்டாமையை ஒழிப்பதில் தீவிர களப்பணி புரிந்தது மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்கப் பணிபுரிந்தவர்களுக்கான தேசிய விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தீண்டாமையை ஒழிப்பதில் தீவிர களப்பணி புரிந்தது மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்கப் பணிபுரிந்தவர்களுக்கான தேசிய விருதை இந்திய அரசு நிறுவியுள்ளது.
தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ( என்.ஜி.ஓ ) அல்லது மனித உரிமை போராளிகளுக்கு இந்த விருது வழங்கப்படும். விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டோர் சிவில் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் அல்லது தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடிகள் வன்கொடுமை வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகியவற்றை நிலைநாட்ட பணிபுரிந்திருக்க வேண்டும்.
இத்திட்டத்தின்படி ஆண்டுக்கு நான்கு விருதுகள் வழங்கப்படும். போராளிக்கு வழங்கப்படும் விருதுத் தொகை ரூ. 2 லட்சம் ஆகும். நிறுவனத்துக்கு வழங்கப்படும் விருதுத் தொகை ரூ. 5 லட்சமாகும்.
மேற்கண்ட துறைகளில் தீவிரமாக சேவை புரிந்த தன்னார்வத் தொண்டு நிறுவனம் அல்லது மனித உரிமைப் போராளி என யாராவது ஒருவருக்கு வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்குப் பகுதிகளை கணக்கில் கொண்டு மொத்தம் நான்கு விருதுகள் வழங்கப்படும். ஒரே பகுதியைச் சேர்ந்த ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த விருது பகிர்ந்து கொடுக்கப்படலாம்.
இந்த விருது இந்த ஆண்டு முதல் வழங்கப்படவுள்ளது. தொடர்ந்து ஆண்டு தோறும் இந்த விருது வழங்கப்படும்.
இனம், பால், ஜாதி, மத அடிப்படையில் ஒடுக்குதல், வேறுபாடுகளைக் கடந்து இந்திய தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், மனித உரிமை போராளிகளுக்கு இந்த விருது வழங்கப்படும்.
சம்பந்தப்பட்ட அமைப்பு விருதுக்கு தேர்ந்தெடுக்கும் அல்லது பரிந்துரை செய்யும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் அல்லது மனித உரிமைப் போராளிகளின் முக்கிய பணிகளை ஒரு தேர்வுக் குழுவும், நீதிபதிகள் குழுவும் தீவிரமாக பரிசீலனை செய்யும்.
கூடுதல் விளக்கங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
Shri R K Meena
Under Secretary
Room No 721 A
Shastry Bhawan
New Delhi
Tel : 011 23386981 / 23384918
www.socialjustice.nic.in
விருதுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : அக்டோபர் 31, 2007 ஆகும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications