சேலம் கோட்ட அறிவிப்பு வரும் வரை போராட்டம்
கோயம்புத்தூர்:சேலம் ரயில்வே கோட்டம் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிடும் வரை கோவை ரயில் நிலையத்தில் கேரள மாநிலத்திற்கு செல்லும் ரயில்களை தொடர்ந்து மறியல் செய்வோம் என்று போராட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சேலம் ரயில்வே கோட்டம் பிரச்சனையில், கேரள அரசை எதிர்த்து இன்று காலை முதல் ரயில் மறியல் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
அதன்படி இன்று காலை 5 மணிக்கே போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினர் கோவை ரயில் நிலையத்திற்கு மறியலில் ஈடுபட திரண்டு வந்தனர்.
ஆனால் அவர்களை போலீசார் ரயில் நிலையத்திற்குள் விடாமல் தடுத்து நிறுத்தினர். நேரம் செல்ல செல்ல அனைத்து கட்சிகளை சேர்ந்தவர்களும் ரயில் மறியல் போராட்டத்திற்கு திரண்டு வந்த வண்ணம் உள்ளனர்.
இந் நிலையில் நிருபர்களிடம் ராமகிருஷ்ணன் கூறியதாவது
ரயில் மறியல் போராட்ட அறிவிப்பை தொடர்ந்து கோவையில் இருந்து கண்ணணூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படவில்லை. கோவையிலிருந்து கேரளாவுக்கு எந்த எக்ஸ்பிரஸ் ரயிலும் செல்லவில்லை. அதே போல் வெளியூரிலிருந்து கோவைக்கு வரும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
சேலம் ரயில்வே கோட்ட அறிவிப்பை மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் முறைப்படி அறிவிக்கும் வரை போராட்டம் தொடர்ந்து நடக்கும். இதில் எந்த மாற்றமும் கிடையாது என்றார் ராமகிருஷ்ணன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications