திருச்சி ரவுடி பொன்மலை ஜெயராஜ் கைது
Subscribe to Oneindia Tamil
திருச்சி:பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட பிரபல ரவுடியை திருச்சி போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருச்சி பொன்மலை ரயில்வே காலனியை சேர்ந்தவன் ஜெயராஜ் என்கிற பொன்மலை ஜெயராஜ்.
இவர் மீது கே.கே.நகர் காவல் நிலையத்தில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. அது மட்டுமின்றி கண்டோண்மெண்ட், பொன்மலை, காவல் நிலையங்களிலும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவ்வழக்குகள் சம்பந்தமாக போலீசார் இவரை தேடி வந்தனர்.
இந்நிலையில் ஜெயராஜ், பொன்மலை ரயில்வே காலனி அருகில் ஒருவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டுள்ளதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸார் அங்கு விரைந்தனர். ஜெயராஜை சுற்றி வளைத்துக் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications