தென்கொரிய பிணைக்கைதிகள் 3 பேர் விடுதலை
காபூல்: தாலிபன் தீவிரவாதிகள் பிடியில் இருந்த தென்கொரிய பிணையாளிகளில் 3 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் ஆப்கானிஸ்தானில் 23 தென்கொரியர்களை பிணைக் கைதிகளாக தாலிபன் தீவிரவாதிகள் கடத்தி சென்றனர். அவர்களை விடுவிக்க வேண்டுமென்றால், ஆப்கானிஸ்தானில் உள்ள தென்கொரிய நாட்டு படைகளை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.
ஆனால் தாலிபன்களின் கோரிக்கைக்கு தென்கொரிய அரசு செவி சாய்க்கவில்லை. தாலிபன்கள் விடுத்த கெடு முடிந்தும் எதுவும் நடக்காததால், பிணைக்கைதிகள் 2 பேரை அடுத்தடுத்து கொன்றனர். 2 பெண்கள் விடுவிக்கப்பட்டனர்.
2 பேரை கொன்றதால் அதிர்ச்சியடைந்த தென்கொரிய அரசு, மீதமுள்ள 19 பேரை உயிருடன் விடுவிக்க தூதுக்குழுவை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைத்தது. தாலிபன் பிரதிநிதிகளுடன் தூதுக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து பிணைக் கைதிகளை விடுவிக்க தாலிபன் அமைப்பு ஒத்துக் ெகாண்டது. இதற்கு சில நிபந்தனைகளை தாலிபன் விதித்துள்ளது.
தென்காரியா தனது படைகளை ஆப்கனிலிருந்து விலக்கிக் கொள்ள வேண்டும், ஆப்கானிஸ்தானில் தென்கொரியர்கள் எவரும் கிறிஸ்தவ மத பிரசாரத்தில் ஈடுபடக்கூடாது என நிபந்தனை விதித்துள்ளனர். இந்த நிபந்தனையை ஏற்றுக் கொண்டால் இன்னும் ஓரிரு தினங்களில் பிணைக் கைதிகள் அனைவரையும் விடுவிப்போம் என்றும் தெரிவித்தனர்.
தென்கொரிய அரசு தாலிபன் தீவிரவாதிகளின் கோரிக்கையை ஏற்க முன்வந்தது. இதையடுத்து தாலிபன் தீவிரவாதிகள் அதனை வரவேற்கும் விதமாக முதலில் 3 தென்கொரியர்களை விடுவித்தனர். அவர்கள் தாலிபன் மலைவாழ் மக்கள் மூலம் செஞ்சிலுவை இயக்கத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
எஞ்சியுள்ள 16 பிணைக் கைதிகளை நாளை விடுவிக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications