தூத்துக்குடியில் மாயமான 3 மாணவிகள் சென்னையில் மீட்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:தூத்துக்குடியில் மாயமான 3 பள்ளி மாணவிகளும் சென்னையில் மீட்கப்பட்டுள்ளனர்.
![]() |
தூத்துக்குடி தெற்கு புதுத் தெருவைச் சேர்ந்த கோதரின் மகள் சையத் பிஷ்மி நிஷா. அதே தெருவைச் சேர்ந்த காதர் ஹூசேனின் மகள் நஸ்ரின். இவர்களது தோழி அண்ணா நகர் 3வது தெருவைச் சேர்ந்த குணசேகரனின் மகள் இருதயரோஸ் சியாமளா.
![]() |
சியாமளாவும், நிஷாவும் வி.இ. ரோட்டில் உள்ள ஒரு பள்ளியில் ப்ளஸ் 2வும், நஸ்ரின் ப்ளஸ் 1ன்னும் படித்து வந்தனர்.
![]() |
சமீபத்தில் நடந்த இடைத் தேர்வில் நிஷா 2 பாடத்தில் மார்க் குறைவாக வாங்கியதால் தந்தை கோதர் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த நிஷா இது குறித்து தோழிகளிடம் கூறி அழுதுள்ளார்.
கடந்த 25-ம் தேதி பள்ளி முடிந்து வீடு திரும்பிய 3 பேரும் நிஷா வீட்டில் படித்துக் கொண்டிருந்தனர். பின்னர் திடீரென மாயமாகி விட்டனர். பல இடங்களில் தேடியும் அவர்கள் கிடைக்காததால் இது குறித்து கோதர் மத்திய பாகம் போலீசில் புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் ரகுநாதன், சப்-இன்ஸ்பெக்டர் இசக்கிமுத்து, பழனிச்சாமி ஆகியோர் தனிப்படை அமைத்து 3 பேரையும் தேடி வந்தனர்.
இந்நிலையில் இந்த மூன்று மாணவிகளும் சென்னை மேடவாக்கத்தில் உள்ள நிஷாவின் அத்தை வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு மதுரை, விழுப்புரம், பாண்டிச்சேரி ஆகிய ஊர்களில் சுற்றி விட்டு கடைசியில் என்ன செய்வது என்று தெரியாமல் சென்னைக்குச் சென்றுள்ளனர்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!















Click it and Unblock the Notifications