2 மகன்களைக் கொடூரமாகக் கொன்றதந்தைக்கு இரட்டை ஆயுள்
வேலூர்:மனைவியின் நடத்தை மீது கொண்ட சந்தேகத்தால் தனது இரு மகன்களையும் மலைப் பாறையில் மோதச் செய்து கொடூரமாகக் கொன்ற தந்தைக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
வேலூர் மாவட்டம் மிட்டாகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் வில்வநாதன். இவருக்கு வனஜா (35) என்ற மனைவி உள்ளார். மற்றும் ஹரிபாபு (7), அரவிந்தன் (5) என இரு மகன்கள் இருந்தனர்.
இந்த நிலையில் வனஜாவின் நடத்தை மீது திடீரென சந்தேகம் வந்தது வில்வநாதனுக்கு. தனது இரு மகன்களும் தனக்குப் பிறக்கவில்லையோ என சந்தேகம் அடைந்தார்.
இந்த நிலையில், தனது நிலங்கள் சிலவற்றை விற்க தீர்மானித்தார் வில்வநாதன். ஆனால் அதை எதிர்த்த வனஜா அவற்றை பிள்ளைகள் பெயரில் எழுதி வைக்கும்படி அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக வனஜாவுடன் சண்டை போட்டார் வில்வநாதன்.
கடந்த 2002ம் ஆண்டு மே மாதம் தனது தாயார் வஜ்ரம்மாள் வீட்டுக்கு பிள்ளைகள் இருவரையும் விடுமுறைக்காக அனுப்பி வைத்தார் வனஜா. இந்த நிலையில், மே 31ம் தேதி தனது மாமியார் வீட்டுக்குப் போனார் வில்வநாதன். அங்கிருந்த தனது இரு மகன்களையும் அழைத்துக் கொண்டு கைலாசகிரி மலைக்கு கூட்டிச் சென்றார்.
அங்கு போனதும், இரு மகன்களையும் பாறையில் மோத வைத்து கொடூரமாக கொலை செய்தார். இந்த சம்பவம் தொடர்பாக வில்வநாதனை போலீஸார் கைது செய்தனர். அவர் மீது திருப்பத்தூர் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி எத்திராஜ், பிள்ளைகளை கொடூரமாகக் கொன்ற வில்வநாதனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications