சென்னையில் விடிய விடிய மழை:போக்குவரத்து பெரும் பாதிப்பு
சென்னை:தமிழகம் முழுவதும் நேற்று இரவு முதல் பல்வேறு இடங்களில் கன மழை பெய்துள்ளது. சென்னை நகரில் விடிய விடிய இடி, மின்னலுடன் மழை பெய்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில், ஆந்திர மாநிலக் கடலோரம், வளி மண்டலத்தில் சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 2 நாட்களாக தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக கன மழை பெய்து வருகிறது.
நேற்று அதிகாலையில் சென்னை நகரில் கன மழை பெய்தது. இதனால் நகர் முழுவதும் முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று இரவு சென்னையில் விடிய விடிய இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்தது. விடிய விடிய கொட்டிய இந்த மழையால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கிக் காணப்பட்டது.
மேலும் அகற்றப்படாமல் தேங்கிக் கிடக்கும் குப்பைகளும் மழை நீரில் கலந்து ஓடி வந்து சாலைகளில் சிதறிக் கிடப்பதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.
கன மழை காரணமாக நகரின் சில பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இதேபோல தஞ்சையில் சூறாவளிக் காற்றுடன் கன மழை பெய்தது. இதில் பல இடங்களில் மரங்கள் கீழே விழுந்தன. ஒரு இடத்தில் மின்சாரக் கம்பிகள் உரசிக் கொண்டதால் ஏற்பட்ட பொறியில், 3 குடிசை வீடுகள் தீப்பிடித்து எரிந்தன. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும், இரவு நேரங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு நிலையம் அறிவித்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications