மாறி மாறி கொலை மிரட்டல் புகார் கொடுத்தநகராட்சி கமிஷனர், தமுமுக தலைவர்!
நெல்லை:நெல்லை மாவட்டம் கடையநல்லூர் நகராட்சி ஆணையரும், தமுமுக முன்னாள் தலைவரும் மாறி மாறி போலீஸில் கொலை மிரட்டல் புகார் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடையநல்லூர் நகராட்சி 31-வது வார்டு பகுதியில் தெரு விளக்கு, குடிநீர், சுகாதார பிரச்சனைகளில் கமிஷனர் மதிவாணன் அலட்சியம் காட்டுவதாக கூறி அந்த வார்டு மக்கள், தமுமுக முன்னாள் தலைவரும் வார்டு கவுன்சிலர் நூர்ஜஹானின் கணவருமான சித்திக் பீர் முகமது தலைமையில் போராட்டம் நடத்தினர்.
அந்தப் போராட்டத்தின் போது நகராட்சி கமிஷனர் அறைக்கு பூட்டுக்கு மேல் பூட்டு போட்டு பூட்டி விட்டுச் சென்றனர்.
இந்த நிலையில் சித்திக் பீர் முகமது போலீஸில் ஒரு புகார் கொடுத்தார். அதில், என்னுடைய அறையை எப்படி பூட்டலாம் என எச்சரித்த ஆணையர் என்னையும், என் குடும்பத்தையும் அழித்து விடுவதாக போனில் மிரட்டியதாகவும், இதனால் தனக்கும் தனது குடும்பத்தாருக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என போலீசில் புகார் கொடுத்தார்.
இதற்கு பதிலடியாக ஆணையர் மதிவாணன் கடையநல்லூர் போலீசில் சித்திக் பீர் முகமது மீது ஒரு புகார் கொடுத்துள்ளார்.
அதில் நான் வீட்டில் இருக்கும்போது என்னுடைய அறையை வார்டு மக்களுடன் வந்து சித்திக் முகமது மேல் பூட்டு போட்டு பூட்டியுள்ளார். இது குறித்து போனில் நான் அவரிடம் கேட்டதற்கு என்னையும் நகராட்சி அலுவலகத்தையும் வெடிகுண்டு வைத்து தகர்த்து விடுவதாக மிரட்டினார்.
ஆகவே எனக்கும் நகராட்சி அலுவலகத்துக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இரு தரப்பு புகார்கள் குறித்து கடையநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications