டாடா ஆலை-19ம் தேதி கிருஷ்ணசாமி போராட்டம்
திருநெல்வேலி:டாடாவின் டைட்டானியம் ஆலை அமைவதை எதிர்த்து 19ம் தேதி திருநெல்வேலியில் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கவுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
டைட்டானியம் ஆலை அமைவதை வரும் 3ம் தேதி எதிர்த்து ஆர்ப்பாட்டம், ஊர்வலம் நடத்த காவல்துறையிடம் அனுமதி கேட்டும் கிடைக்கவில்லை. எனவே மதுரை உயர்நீதிமன்ற கிளையை அணுகி அனுமதி பெற்றுள்ளோம்.
அதன்படி வரும் 19ம் தேதி காலை 11 மணிக்கு இடைச்சிவிளையில் ஊர்வலம் தொடங்கி அரசூர் பூச்சிக்காடு, நடுவங்குறிச்சி பிரகாசபுரம் வழியாக கொம்படைக் கோட்டை சார்-பதிவாளர் அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கவுள்ளோம்.
இதில் எந்த கட்சியினர் வேண்டுமானாலும் கலந்துக் கொள்ளலாம். கேபிள் டிவி, டாஸ்மக் மதுக்கடை, மணல் குவாரிகளை தமிழக அரசே நடத்துவது போல் கனிம வள மணல் விற்பனை தொழிலையும் அரசே ஏன் ஏற்று நடத்தக்கூடாது? என்றார்.
மேலும் தாமிரபரணி மணல் கொள்ளையை எதிர்த்து விரைவில் மிகப் பெரிய போராட்டம் நடத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications