மீண்டும் பரவும் சிக்கன்குனியா!
சாத்தான்குளம் (தூத்துக்குடி): தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் மற்றும் சுற்றுப்புறங்களில் மீண்டும் சிக்குன்குன்யா காய்ச்சல் பரவி வருவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
தமிழக்கத்தில் முதன் முதலாக சாத்தான்குளத்தில் தான் சிக்கன் குனியா காய்ச்சல் உண்டானது. இங்குள்ள இடைச்சிவிளை கிராமத்தில் தொடங்கி தமிழகம் முழுவதும் வேகமாக பரவியது.
இதையடுத்து மருத்துவக் குழுவினர் இங்கு அனுப்பப்பட்டு இப்பகுதிகளில் உள்ள அனைத்து கிராமங்களிலும் மருத்துவ முகாம்கள் அமைத்து நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். இந்நோய் தாக்கிய சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் இறந்துபோனார்கள். பல வயதானவர்களுக்கு தொடர் மூட்டுவலி ஏற்பட்டது.
முதலில் நோய் பெயர் தெரியாமல் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் நோய் குணத்தை அறிந்து அதன்பின் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒவ்வொரு கிராமங்களிலும் விழிப்புணர்வு பேரணிகள் நடத்தப்பட்டன.
சாத்தான்குளம் பகுதியை கலக்கிய நோய் கடலோர மாவட்டங்கள் தோறும் பரவியது. இந்த நிலையில், கடந்த மாதம் கேரள-தமிழக எல்லை பகுதிகளில் இந்நோய் ஏற்பட்டது.
சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் வண்டிபெரியார், ஆழப்புழா, மார்த்தாண்டம், மூணாறு உள்ளிட்ட இடங்களில் தொழில் செய்து வருகின்றனர். அவர்களுக்கு இந்நோய் தாக்கப்பட்டதும் மருத்துவ சிகிச்சைக்காக சொந்த ஊருக்கு வந்துள்ளனர்.
இதனால் சாத்தான்குளம் பகுதியில் மீண்டும் சிக்கன் குனியா நோய் பரவி வருகிறது. கடந்த முறை சிக்குன்குன்யா வந்தபோது அது வராமல் தப்பியவர்கள் இந்த முறை பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்று கூறப்படுகிறது. இதனால் மக்கள் பீதியமடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications