குன்னூரில் நிதி நிறுவனம் நடத்தி மோசடி:br/கேரளாவில் 'உல்லாசம்'- போலி சாமியார் கைது

Subscribe to Oneindia Tamil


குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூரில் நிதி நிறுவனம் என்ற பெயரில் பல லட்ச ரூபாய் பணத்தை சுருட்டிவிட்டு கேரளாவில் அழகிகளுடன் உல்லாசம் அனுபவித்துக் கொண்டு சாமியார் வேடத்தில் திரிந்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கேரள மாநிலத்தில் உள்ள கோவளத்தில் முட்டைக்காடு என்ற இடத்தில் உள்ள சாமியார் பக்தர்களுக்கு பணத்தை அள்ளி கொடுத்துள்ளார். அவர் மீது பக்தர்களுக்கு எந்த சந்தேகமும் வரவில்லை. ஆனால் போலீசாருக்கு சந்தேகம் வந்தது.

சாமியாரை அணுகி மெல்ல விசாரித்துள்ளனர். அப்போது முன்னுக்குப் பின் முரணாக சாமியார் பேசியுள்ளார். சரி, சாமியாருக்குப் பின்னால் மர்மம் உள்ளது என்ற முடிவுக்கு வந்தனர் போலீஸார்.

இதையடுத்து சாமியாரையும், அவரது உதவியாளர் பெருமாளையும் போலீஸார் உரிய முறையில் விசாரித்தனர். இதில் சாமியாரின் குட்டு வெளிப்பட்டது.

சாமியாரின் பெயர் சுதிர்குமார். 34 வயதாகும் அவர் திருப்பூரைச் சேர்ந்தவர். குன்னூரில் ட்ரீம் வீவர்ஸ் இன்வெஸ்ட்மென்ட் என்ற நிதி நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார்.

பொதுமக்களிடமிருந்து பல லட்சம் பணம் சேர்ந்ததும், அங்கு கடையை மூடி விட்டு கேரளாவுக்கு தப்பி விட்டார். இங்கு வந்து மொட்டையும், ருத்ராட்ச கொட்டையும் போட்டுக் கொண்டு சாமியாராக வலம் வந்துள்ளார்.

இதையடுத்து குன்னூருக்கு போலீஸார் அழைத்துச் சென்று, விசாரித்தபோது அவர் கூறியது உண்மை எனத் தெரிய வந்தது.

இவரது நிறுவனத்தில், கோத்தகிரியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மருமகனும் பார்ட்னராக சேர்ந்துள்ளார். அவர் பெயர் ராவணன்.

இந்த நிதி நிறுவனம் அறிவித்த கவர்ச்சி திட்டங்களை நம்பி வெலிங்டன் ராணுவ பயிற்சி மைய அதிகாரிகள் முதல் கூலித் தொழிலாளிகள் வரை பல லட்சம் பணத்தைக் கொடுத்துள்ளனர்.

முதலில் தனது சொந்த ஊர் திருப்பூர் என்றும், பின்னர் கோட்டயத்தில் பிறந்து ஹைதராபாத்தில் வளர்ந்ததாகவும் முன்னுக்குப்பின் முரணாக சொல்லியதால்தான் சுதிர் குமார் சிக்கிக் கொண்டார்.

அவரிடம் உதவியாளராக, பெருமாள் என்ற பெயரில் இருந்தவர் ராவணன் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

மோசடி செய்து சுருட்டிய பணத்தில் அழகிகளுடனும் உல்லாசமாக இருவரும் இருந்துள்ளனர்.

மோசடிப் பணத்தின் ஒரு பகுதியை உறவினர்கள் சிலரிடம் கொடுத்து வைத்துள்ளாராம் சுதிர் குமார். மேலும் அவரது உறவினர்கள் ஆந்திரா, கேரளாவில் உள்ளனராம். அவர்களிடம் விசாரணை நடத்தி பணத்தைப் பறிமுதல் செய்ய போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+