அனாதை இல்லத்தின் பெயரில் விபச்சாரம்;br/நெல்லையில் 4 பேர் கைது!
திருநெல்வேலி:
நெல்லையில் அனாதை இல்லத்தை நடத்திக் கொண்டு விபச்சாரத் தொழிலையும் செய்து வந்த நான்கு பேரை போலீஸார் பிடித்துள்ளனர்.
நெல்லை தச்சநல்லூர் புது அம்மன் கோவில் தெருவில் ஒரு வீட்டின் மாடியில் அன்னை தெரசா என்ற பெயரில் அனாதை இல்லம் ஒன்று கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இதை அலவந்தான் குளத்தைச் சேர்ந்த மேரி என்பவர் நடத்தி வந்தார்.
இங்கு அனாதை சிறுவர், சிறுமியர் தங்கியிருந்து படித்து வந்தனர். இந்த நிறுவனத்திற்கு வெளிநாடுகளில் இருந்து நிதியுதவியும் பெறப்பட்டுள்ளது.
இந் நிலையில் சில காலமாக இந்த இல்லத்திற்கு ஆண்கள் நிறைய பேர் வந்து செல்ல ஆரம்பித்தனர். அங்கு இளம்பெண்கள் தங்கியிருந்து பாலியல் தொழிலில் ஈடுபடுவதாகவும் போலீசுக்கு தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து போலீசார் ரகசியமாக அந்த இடத்தை கண்காணிக்க தொடங்கினர். இன்று காலை பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் சாதாரண உடையில் சென்று மேரியிடம் தான் ஒரு அனாதை. கணவரால் கைவிடப்பட்டவர். எனவே இங்கு தங்க வேண்டும் என கூறினார்.
அந்த சப் இன்ஸ்பெக்டரைப் பார்த்த மேரி, அவரையும் விபச்சாரத்திற்குப் பயன்படுத்த முடிவு செய்தார். 'அதற்கு' தயாரா என்றும் கேட்டார். இதையடுத்து மேலதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார் சப் இன்ஸ்பெக்டர்.
இதையடுத்து நெல்லை மாநகர ஆணையர் தினகரன் உள்ளிட்ட போலீஸார் அங்கு வந்து மேரி, அவரது ஆண் உதவியாளர் மற்றும் விடுதியில் தங்கி இருந்த 4 இளம்பெண்கள் மற்றும் 8 சிறுவர், சிறுமிகள் ஆகியோரை அழைத்து சென்றனர்.
மேரி உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications