குண்டுவெடிப்பு: பிடிபட்ட வங்கதேசப் பெண்br/வேலூரில் கைதான பரபரப்பு தகவல்!
சென்னை:
ஹைதராபாத் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக ஹைதராபாத் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ள வங்கதேசப் பெண், வேலூரில் வைத்துத்தான் கைது செய்யப்பட்டதாக தற்போது பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹைதராபாத் இரட்டை குண்டுவெடிப்பு சம்பவம் தெடார்பாக வங்கதேசத்தைச் சேர்ந்த பெண் லஜ்ஜாஜினி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது குடும்பத்தினர் தலைமறைவாகி விட்டனர். அவரை போலீஸார் தேடி வருவதாக ஹைதராபாத் போலீஸார் தெரிவித்திருந்தனர்.
முதலில் இந்தப் பெண் வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் படித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதை கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மறுத்தது.
இந்த நிலையில் அப்பெண் கைது செய்யப்பட்ட விவரத்தை டிஜிபி ராஜேந்திரன் இன்று விளக்கினார். சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ஹைதராபாத் இரட்டை குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக ஆந்திர போலீஸார் வேலூரில் ஒரு மாணவியைக் கைது செய்துள்ளனர். அவரது பெயர் லஜ்ஜாஜினி.
ஹைதராபாத்திலிருந்து வந்த தனிப்படை போலீஸார் அந்த மாணவியைக் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.
அவர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்பதும், 2008ம் ஆண்டு வரை இந்தியாவில் தங்கிப் படிக்க மாணவர் விசாவில் வந்துள்ளதும் தெரிய வந்துள்ளது என்றார்.
லஜ்ஜாஜினி, காட்பாடியில் உள்ள காந்தி நகர் பகுதியில் வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்கியுள்ளார். மாதம் ரூ. 500 வாடகையாக தந்துள்ளார். அவருடன் அவரது சகோதரரும் தங்கியுள்ளார்.
வேலூரில் உள்ள ஆக்ஸீலியம் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பி.ஏ. ஆங்கிலப் படிப்பை படித்து வந்துள்ளார் லஜ்ஜாஜினி.
ஹைதராபாத் சம்பவத்திற்குப் பிறகு இருவரும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இந்த நிலையில்தான் ஆந்திர போலீஸார் லஜ்ஜாஜினியைக் கைது செய்தனர். ஆனால் அவரது சகோதரர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை.
லஜ்ஜாஜினியும், அவரது சகோதரரும் தங்கியிருந்த வீட்டில் இன்று போலீஸார் சோதனை நடத்தினர். பின்னர் வீட்டைப் பூட்டி போலீஸார் சீல் வைத்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications