நெல்லையில் மழை - மின்னல் தாக்கிbr/மாணவர் உட்பட 4 பேர் படுகாயம்
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் பெய்த திடீர் மழை காரணமாக, மின்னல் தாக்கி மாணவர் உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பிற்பகல் 12 மணிக்கு பலத்த இடி இடித்தது.
கருமேகங்கள் சூழ்ந்ததால் குளிர்ந்த காற்று வீசியது. பின்னர் காற்றுடன் சுமார் ஒரு மணி நேரம் மழை பெய்தது.
நடுவங்குறிச்சி தெற்கு தெருவைச் சேர்ந்த முத்தையா மகன் ராஜேந்திரன் பாளையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
நேற்று விடுமுறை நாள் என்பதால் மாட்டை மேய்ச்சலுக்கு வயலுக்கு கொண்டு சென்றார். அப்போது இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ததால் மாட்டை ராஜேந்திரன் வீட்டுக்கு கொண்டு வந்துள்ளார். அப்போது, திடீரென மின்னல் தாக்கியதில் ராஜேந்திரன் மயங்கி விழுந்தார்.
இதேபோல, சங்கரன்கோவில் அருகேயுள்ள ஆட்கொண்டார் குளம் கிராமம் வடக்கு தெருவைச் சேர்ந்த முருகையா, முருகன், குருசாமி மகன் காளிராஜ் ஆகிய மூவரும் ஆட்கொண்டார்புரம் அருகேயுள்ள பாறை ஊரணி பகுதியில் 200 ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்ந்தது. மின்னல் தாக்கியதில் 3 பேரும் மயங்கி விழுந்தனர். 8 ஆடுகளும் பலியாயின. 3 பேரும் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இறந்த ஆடுகளின் மதிப்பு ரூ.30 ஆயிரம் ஆகும்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications