தூத்துக்குடி: 4 இலங்கை தமிழ் மீனவர்கள் கைது
தூத்துக்குடி:
இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த நான்கு இலங்கைத் தமிழ் மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மன்னார் வளைகுடா பகுதியில் இந்திய கடலோர காவல் படையின் ரோந்துக் கப்பல் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது மணப்பாடு கலங்கரை விளக்கம் அருகே ஒரு படகு இந்திய எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அந்தப் படகை நெருங்கிய கடலோரக் காவல் படை அதிகாரிகள், அவர்களிடம் விசாரணை நடத்தியதில் படகில் இருந்த நான்கு பேரும் இலங்கை மீனவர்கள் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து அந்தப் படகை மீட்ட கடலோரக் காவல் படைக்கு கரைக்குக் கொண்டு வந்தது. படகில் இருந்தவர்கள் அந்தோணி சுனில், சில்வின் ஜஸ்டீனியஸ், ஜோ கிளீனஸ், பிரான்சிஸ் நிமல் என்பது தெரிய வந்தது. அவர்கள் நான்கு பேரும் தமிழ் மீனவர்கள்.
அவர்களிடம் விசாரணை நடத்தியதில், கடந்த 6ம் தேதி நீர்க்கொழும்பு பகுதியிலிருந்து அவர்கள் மீன் பிடிக்க படகில் கிளம்பியுள்ளனர். நடுக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, படகு பழுதடைந்துள்ளது. இதனால் படகு போன போக்கில் அவர்களும் வந்துள்ளனர். இப்படியாக அது இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்துள்ளது.
வழி தவறி வந்தவர்கள் என்றாலும் கூட அத்துமீறி இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்ததாக நான்கு தமிழ் மீனவர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்களின் படகு, 50 கிலோ மீன்கள் மற்றும் மீன்பிடி வலைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications