வடிவேலு - விஜயகாந்த் ரசிகர்கள் மோதல்br/இன்ஸ்பெக்டர் திடீர் மாற்றம்
சென்னை:
நடிகர் வடிவேலுவுக்கும், விஜயகாந்த் ஆதரவாளர்களுக்கும் இடையே நடந்த மோதல் தொடர்பான வழக்கை விசாரித்து வந்த விருகம்பாக்கம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அழகேசன் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நடிகர் வடிவேலுவின் அலுவலகம் முன்பாக விஜயகாந்த் ரசிகர்கள் கார்களை நிறுத்தியிருந்தனர். இதுதொடர்பாக அவர்களுக்கும், வடிவேலுவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் வடிவேலு அடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதேபோல, வடிவேலுவின் அலுவலகம் மீதும் கல் வீசப்பட்டது.
இந்தப் பிரச்சினை தொடர்பாக வடிவேலு மீதும், விஜயகாந்த் ஆதரவாளர்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக விஜயகாந்த் வீட்டு வாட்ச்மேன் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 24 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
வடிவேலு மீதும் கொலை மிரட்டல், கலகம் விளைவித்தல் உள்ளிட்ட ஜாமீனில் வெளி வர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விஜயகாந்த் தரப்பினரைக் கைது செய்தது போல, வடிவேலுவும் கைது செய்யப்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் விருகம்பாக்கம் இன்ஸ்பெக்டர் அழகேசன் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார். அவர் மாற்றப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை.
இதற்கிடையே, வடிவேல் தரப்பில் முன்ஜாமீன் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications