பிளஸ்டூ, பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு முகாம்!
சென்னை:
பிளஸ்டூ மற்றும் பட்டப் படிப்பை முடித்தவர்களுக்கு சிறப்பு வேலை வாய்ப்பு முகாமுக்கு சென்னை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயா விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
சென்னை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகமும், எக்ஸ்பர்டர்ஸ் நிறுவனமும் இணைந்து பிளஸ்-2, பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம் ஆகிய பட்டப் படிப்புகளை 2003ம் ஆண்டு மற்றும் அதற்கு பின்னர் முடித்தவர்களுக்கான சிறப்பு வேலை வாய்ப்பு முகாமை நடத்துகிறது.
வருகிற 23ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணி முதல் 2 மணி வரை சென்னை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை வருமானவரி அலுவலகத்தில் அமைந்துள்ள அசம்சன் மேல்நிலைப் பள்ளியில் இது நடைபெறுகிறது.
இந்த முகாமில் முன்னணி நிறுவனங்களான ரிலையன்ஸ், ஏ.ஐ.ஜி., ஸ்பர்ஷ் பி.பி.ஓ., ஆப்டிமஸ் பி.பி.ஓ., ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மற்றும் ஏ.டி.டி. கியோஸ்க் ஆகியவை கலந்து கொண்டு தமிழ் மற்றும் ஆங்கில கால் சென்டர்கள், கஸ்டமர் சர்வீஸ், சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் போன்ற பணியிடங்களுக்கு 600க்கும் மேற்பட்டவர்களை நியமனம் செய்ய உள்ளன.
இந்த முகாமில் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.4 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை மாத ஊதியம் தகுதிக்கு ஏற்ப வழங்கப்படும். ஊதியத்துடன் பிராவிடன்ட் பண்ட், இ.எஸ்.ஐ. ஆகிய சலுகைகளும் அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படுவோருக்கு அன்றைய தினமே நியமன ஆணை வழங்கப்பட உள்ளது. எனவே பங்கேற்க வருபவர்கள் தங்கள் கல்வித் தகுதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், பயோ டேட்டா ஆறு நகல்கள் மற்றும் 3 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் எடுத்து வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications