பந்த்துக்குப் பதில் நாளை உண்ணாவிரதம்; சென்னையில் கருணாநிதி பங்கேற்பு!
சென்னை:
தமிழக பந்த்திற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து விட்டதால், பந்த்துக்குப் பதிலாக தமிழகம் முழுவதும் நாளை உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். திருவல்லிக்கேணியில் கருணாநிதி உண்ணாவிரதம் மேற்கொள்ளவுள்ளார்.
சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றக் கோரி நாளை தமிழகம் முழுவதும் பந்த் நடத்த திமுக கூட்டணி அழைப்பு விடுத்திருந்தது. இதற்கு உச்சநீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை விதித்தது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் திமுக கூட்டணி பெரும் அதிர்ச்சி அடைந்தது.
இதையடுத்து பந்த் நடத்தத் திட்டமிட்டப்பட்ட நாளைய தினம் திமுக கூட்ணி சார்பில் தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
அதன்படி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் திமுக அணியினர் காலை முதல் மாலை வரை உண்ணாவிரதம் இருப்பார்கள். சென்னையில் திருவல்லிக்கேணியில் முதல்வர் கருணாநிதி உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறுக்கே நிற்கும் நந்திகள் - கருணாநிதி ஆவேசம்
நாளைய உண்ணாவிரதப் போராட்டம் குறித்து முதல்வர் கருணாநிதி கூறுகையில், தமிழர்களுக்கு நலம் பயக்கும் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற சில நந்திகள் குறுக்கே நிற்கின்றன. இதற்கு வருத்தம் தெரிவித்தே நாளைய உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படுகிறது என்று குறிப்பிட்டார்.
உண்ணாவிரதப் போராட்டம் குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசித்து, ஒருமித்த முறையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
புதுவையிலும் நாளை உண்ணாவிரதம்:
தமிழகத்தைப் போலவே புதுவை மாநிலத்திலும் திமுக கூட்டணியினர் நாளை உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தவுள்ளனர்.
இதுகுறித்து மாநில திமுக அமைப்பாளர் ஆர்.வி.ஜானகிராமன் கூறுகையில், திமுக தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதியின் உத்தரவுப்படி புதுச்சேரியிலும் நாளை சேது சமுத்திரத் திட்டத்தை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும்.
இந்தப் போராட்டத்தில் திமுக கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் பங்கேற்கும். புதுச்சேரி, வெங்கடசுப்பாரெட்டியார் சிலை அருகே இந்தப் போராட்டம் நடைபெறும் என்றார்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications