நெல்லை பல்கலையில் பட்டங்கள் வழங்கிய பர்னாலா
திருநெல்வேலி:
நெல்லை பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் 182 பேருக்கு தமிழக கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா பட்டங்கள் வழங்கினார்.
நெல்லை பல்கலைக்கழக 15வது பட்டமளிப்பு விழா மற்றும் ரூ.4.50 கோடியில் புதிய ஆடிட்டோரியம் திறப்பு விழாக்களில் தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா பங்கேற்றார்.
இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக கவர்னர் பர்னாலா தனி ஹெலிகாப்டர் மூலம் நெல்லை பல்கலை கழகம் வந்தார். கவர்னர் பர்னாலாவை நெல்லை மேயர் எல்.ஏ சுப்பிரமணியன், கலெக்டர் பிரகாஷ், மாநகர போலீஸ் கமிஷனர் மஞ்சுநாதா, துணைவேந்தர் சிந்தியா பாண்டியன், துணை மேயர் முத்துராமலிங்கம், மாநகராட்சி கமிஷனர் மோகன் பதிவாளர் செல்லத்துரை உள்ளிட்டோர் வரவேற்றனர்.
பின்னர் பல்கலைகழகத்தில் ரூ.4.50 கோடி மதிப்பீ்ட்டில் கட்டப்பட்ட ஆடிட்டோரியத்தை பர்னாலா திறந்து வைத்தார். தொடர்ந்து நடந்த பட்டமளிப்பு விழாவிற்கு பர்னாலா தலைமை வகித்து 82 பேருக்கு பி.எச்.டி பட்டமும், 17 பேருக்கு எம்.பில் பட்டமும், 45 பேருக்கு முதுநிலை பட்டமும், 38 பேருக்கு இளநிலை பட்டமும் உள்ளிட்ட 182 பேருக்கு பட்டங்கள் மற்றும் தங்க பதங்கங்கள் வழங்கினார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications