உலகிலேயே அதிவேக ஏவுகணை 'பிரமோஸ்'!
நாகர்கோவில்:
உலகிலேயே அதிவேக ஏவுகணை இந்தியாவிடம் உள்ளது என்று டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானி சிவதாணுப் பிள்ளை கூறியுள்ளார்.
ஏவுகணை விஞ்ஞானியான சிவதாணு பிள்ளை பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாகர்கோவில் வந்தார். அங்கு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இந்தியா இதுவரை 5 வகையான ஏவுகணைகளை தயாரித்துள்ளது. அதில் முக்கியமானது அக்னி ஏவுகணை. இந்த ஏவுகணை 2000 கிமீ வேகத்தில் சென்று தாக்கக் கூடிய சக்தி வாய்ந்தது.
இதை ஏவும்போது 500 கிமீ தூரம் மேல்நோக்கி சென்று பின்னர் 85 கிமீ தூரம் திரும்பி வந்து துல்லியமாக இலக்கை தாக்கும் திறன் கொண்டதாகும்.
இதே போல் நவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இன்னொரு ஏவுகணை பிரமோஸ் ஏவுகணையாகும். இந்த ஏவுகணை இந்தியா-ரஷ்யா கூட்டு தயாரிப்பில் உருவானது.
பிரமோஸ் போன்ற சூப்பர் சானிக் ஏவுகணை எந்த நாட்டிலும் கிடையாது. கப்பலில் இருந்து மற்றெரு கப்பலை தாக்க வேண்டுமானாலும் சரி, நிலப்பரப்பு பகுதியை தாக்க வேண்டுமானாலும் சரி 300 கிமீ தொலைவு சென்று அதிவேகமாக தாக்க கூடியது. இந்த ஏவுகணையின் வேகம் ஒலியை விட மூன்று மடங்கு அதிகமாகும்.
குறிப்பிட்ட தூரத்தில் இருந்து குறிப்பிட்ட இலக்கை அதிவேகமாக சென்று தாக்கும் இந்த ஏவுகணை தான் உலகின் முதன்மையான ஏவுகணையாக உள்ளது. இந்த ஏவுகணையை இந்திய கப்பல் படைக்கும், ராணுவத்துக்கும் வழங்கி வருகிறோம்.
200 வகையான பொருட்கள்:
ஏவுகணை தயாரிக்கப் பயன்படும் பொருட்களில் இருந்து செயற்கை கால் (காலிபர்), பேஸ்மேக்கர், டைபாய்டு காய்ச்சல் சோதனை கருவி, உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட பொருட்களை தயாரித்து கொடுக்கிறோம். அவை அனைத்தும் மருத்துவ பயன்பாடுகள் கொண்டவையாகும்.
ராணுவ வீரர்களுக்காக நாங்கள் தாயரிக்கும் மருத்துவ சாதனங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன.
சாதாரணமாக ஒருவருக்கு டைபாய்டு காய்ச்சல் இருக்கிறதா, இல்லையா என்பதை தெரிந்து கொள்ள 3 நாட்கள் ஆகும். ஆனால் நாங்கள் தயாரிக்கும் டைபாய்டு டெஸ்ட் கிட் மூலம் 3 நிமிடத்தில் கண்டுபிடித்து விட முடியும் என்றார் சிவதாணுப்பிள்ளை.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications