ராமர்: கருணாநிதிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
சென்னை:
ராமர் குறித்து முதல்வர் கூறிய கருத்தை எதிர்த்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாரதிய ஜன சக்தி தலைவர் ராம. தங்கராசு தொடர்ந்த வழக்கின் விசாரணை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
முன்னாள் ம.பி. முதல்வர் உமாபாரதியின் பாரதிய ஜன சக்தி கட்சியின் தமிழகத் தலைவர் ராம.தங்கராசு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார்.
அதில், ராம பிரான் குறித்து முதல்வர் கருணாநிதி கூறியுள்ள கருத்துக்கள் இந்துக்ளின் மனதைப் புண்படுத்தும் வகையில் உள்ளன. இதனால் சமூகத்தில் சட்டம் ஒழுங்கு, பொது அமைதி குலையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே முதல்வர் கருணாநிதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதிகள் முகோபாத்யாயா, பால் வசந்தகுமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுவில் சில திருத்தங்களைத் தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications