திரைப்பட பத்திரிக்கையாளர் சங்க நியூஸ் லெட்டர்!
திரைப்பட பத்திரிக்கையா
ளர் சங்க, அதிகாரப்பூர்வ செய்தி மடலை தமிழக செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி வெளியிட்டார்.
சென்னையில் உள்ள திரைப்பட பத்திரிக்கையாளர்கள் இணைந்து 2 ஆண்டுகளுக்கு முன்பு சங்கம் அமைத்தனர். 2005ம் ஆண்டு 50 உறுபப்பினர்களுடன் உருவான இந்த சங்கத்தை நிறுவியர் அய்யப்ப பிரசாத்.
கடந்த ஆண்டு சங்கத்திற்கு நடந்த நிர்வாகிகள் தேர்தலில் தமிழன்பன் தலைவராகவும், ரவிசங்கர் பொதுச் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் சங்கத்தின் சார்பில் புதிய செய்தி மடலை உருவாக்க திட்டமிடப்பட்டது. அக்டோபர் மாதம் முதல் இந்த இதழைக் கொண்டு வரவும் தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி செய்தி மடல் என்ற பெயரில் உருவாகியுள்ள இதழ் அமைச்சர் பரிதி இளம்வழுதியால் வெளியிடப்பட்டது.
அவரது இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியில், முதல் இதழை பரிதி இளம்வழுதி வெளியிட்டு வாழ்த்தினார்.
முன்னதாக சங்கத் தலைவர் தமிழன்பன் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அமைச்சரிடம் வழங்கினார். திரைப்பட பத்திரிக்கையாளர்களுக்கு அரசு அடையாள அட்டை, இலவச பஸ் பாஸ், வீட்டு மனை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு அமைச்சரிடம் வழங்கப்பட்டது.
இந்தக் கோரிக்கைகள் குறித்து பரிவுடன் பரிசீலிப்பதாக அமைச்சர் உறுதியளித்தார். திரைப்பட பத்திரிக்கையாளர்களின் கோரிக்கைகள் கனிவுடன் பரிசீலிக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.
நிகழ்ச்சியின்போது பத்திரிக்கையாளர் சங்க துணைத் தலைவர் வேணுஜி, இணைச் செயலாளர்கள் ராதா ராஜ், பிஸ்மி, பொருளாளர் மேஜர் தாசன், செயற்குழு உறுப்பினர்கள் டாக்டர் எஸ்.சங்கர், முத்து ரத்தின சக்திவேல் ஆகியோரும் உடன் இருந்தனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications