பெரியகுளம் அருகே பயங்கர கலவரம்: போலீஸ் துப்பாக்கிச் சூடு-4 பேர் காயம்
பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தலித் வகுப்பைச் சேர்ந்த இரு பிரிவினருக்கிடையே பயங்கர மோதல் மூண்டது. இரு தரப்பினரும் கற்கள், அரிவாள்களால் தாக்கிக் கொண்டனர். போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக் குண்டுளை வீசியும் கலவரத்தை அடக்கினர்.
பெரியகுளம், ஜெயமங்கலம் அருகே நடுப்பட்டி கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. தலித் சமூகத்தினர் இந்தக் கோவிலில் வழிபட்டு வருகிறார்கள். அப்பகுதியில் பிரபலமான இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் விழா எடுக்கப்பட்டு, சாமி வேடம் பூண்டு ஊர்வலமும் நடைபெறும்.
சாமி வேடம் பூண்டு ஊர்வலம் நடத்துவதில் நடுப்பட்டி மற்றும் சிண்டுவம்பட்டி கிராம மக்களுக்கிடையே பிரச்சினை எழுந்ததால், ஊர்வலத்திற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த ஆண்டு திருவிழா நேற்று நடந்தது. அப்போது சிண்டுவம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கிராமத்தினர் திடீரென சாமி வேடம் போட்டு ஊர்வலமாக கிளம்பினர்.
இதைப் பார்த்த நடுப்பட்டி கிராமத்தினர் ஆத்திரமடைந்து சிண்டுவம்பட்டி கிராமத்தினருடன் மோதலில் இறங்கினர். கல்வீச்சில் தொடங்கிய மோதல் பின்னர் அரிவாள்களுடன் பெரும் மோதலமாக மாறியது.
இதையடுத்து ஆயுதப் படை போலீஸார் வரவழைக்கப்பட்டனர். இரு கிராமங்களையும் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கம்பு, அரிவாள்களுடன் துரத்தி துரத்தி மோதிக் கொண்டதால் அப்பகுதியே போர்க்களம் போலக் காணப்பட்டது.
கலவரத்தை அடக்க வந்த போலீஸாரையும் கிராமத்தினர் தாக்க முயன்றதால் நிலைமை மோசமானது. இதையடுத்து தடியடி நடத்தப்பட்டது. அப்படியும் கூட்டம் கலையாததால் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி போலீஸார் கலைத்தனர். வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது.
இந்த மோதலில் நான்கு பேர் படுகாயமடைந்தனர். சம்பவம் நடந்த இடத்தை தென் பிராந்திய ஐஜி சஞ்சீவ் குமார் நேரில் வந்து பார்த்தார். டிஐஜி கிருஷ்ணமூர்த்தியும் விரைந்து வந்தார்.
வன்முறை தொடர்பாக 7 பேர் கைது செயய்ப்பட்டுள்ளனர். இரு கிராம மக்களிடையேயும் தொடர்ந்து பதட்டம் நிலவி வருவதால் அங்கு ஆயுதம் தாங்கிய போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications