மதுரையில் மருது சகோதர்களுக்கு சிலை- திறந்து வைக்கும் கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மருது சகோதர்கள் சிலையை திறந்து வைக்க தமிழக முதல்வர் கருணாநிதி வரும் 31ம் தேதி மதுரை வருகிறார்.
வெள்ளையர்களை எதிர்த்துப் போரிட்டு வீர மரணம் அடைந்தவர்கள் சின்ன மருது, பெரிய மருது சகோதரர்கள். சிவகங்கையை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி புரிந்தவர்கள்.
இந்த சகோதர்களுக்கு மதுரை தெப்பக்குளம் அருகே வெண்கலத்தால் ஆன சிலை வைக்கப்பட்டுள்ளது. சின்ன மருதுவும், பெரிய மருதுவும் குதிரைகளில் வாள் பிடித்து அமர்ந்தாவாறு ஒரு டன் எடையில் இந்தச் சிலை உருவாக்கப்பட்டுள்ளது.
தஞ்சை அருகில் உள்ள சுவாமிமலையில் வடிவமைக்கப்பட்ட இச் சிலையில்ன் மதிப்பு ரூ. 20 லட்சமாகும்.
இந்த மருது சகோதர்கள் சிலையை முதல்வர் கருணாநிதி வரும் 31ம் தேதி திறந்து வைக்கிறார்.












Click it and Unblock the Notifications