நகராட்சி தலைவியை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டி:
கோவில்பட்டி அதிமுக கவுன்சிலர் ராமர் மீது பொய் புகார் கொடுத்த நகராட்சி தலைவி மல்லிகாவை கண்டித்தும், வழக்கை வாபஸ் பெறக் கோரியும், நகர அதிமுக மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட மகளிரணி துணைச் செயலாளர் கவுசல்யா தலைமை வகித்தார். வார்டு கவுன்சிலர்கள் பத்மாவதி, விமலாதேவி முன்னிலை வகித்தனர். மாவட்ட இணைச் செயலாளர் விஜயலட்சுமி வரவேற்றார். தொகுதி எம்.எல்.ஏ ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். இதில் மகளிரணியினர் 500 பேர் கலந்து கொண்டனர்.
இதற்கிடையே, சர்ச்சைக்குரிய கவுன்சிலர் ராமரைக் கைது செய்யக் கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
கோவில்பட்டி தாலூகா அலுவலகம் முன்பு நடந்த தர்ணாவிற்கு மாவட்ட செயலாளர் ருக்மணி தலைமை வகித்தார். தர்ணாவை துவக்கி வைத்து மாநில செயலாளர் வாசுகி பேசினார்.
நகராட்சித் தலைவியை இழிவுபடுத்திப் பேசிய ராமரைக் கண்டித்தும், உடனடியாக அவரைக் கைது செய்ய வேண்டும் என்று கோரியும் கூட்டத்தினர் கோஷமிட்டனர்.
கோவில்பட்டி, சாத்தூர், மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கயத்தாறு, கழுகும்லை, விருதுநகர், எட்டையாபுரம், சிவகாசி மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஆயிரத்து 500 பெண்கள் கலந்து கொண்டனர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications