போதையில் ரகளை-அதிமுக கவுன்சிலருக்கு எஸ்.ஐ அடி, உதை
பெரியகுளம்:
பெரியகுளம் பஸ் நிலையத்தில் குடி போதையில் ரகளை செய்த அதிமுக கவுன்சிலருக்கு அடி, உதை விழுந்தது. பின்னர் அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
பெரியகுளம் வடகரை பள்ளிவாசல் பகுதியை சேர்ந்தவர் ராஜா முகம்மது. அதிமுகவைச் சேர்ந்த இவர், சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று, அப்பகுதியின் 7வது வார்டு கவுன்சிலராகவும் உள்ளார்.
இவர் நன்றாக குடித்துவிட்டு, பெரியகுளம் பஸ் நிலையம் அருகே நின்று கொண்டு வருவோர் போவோரை எல்லாம் ஆபாசமாக திட்டிக் கொண்டிருந்தார்.
கவுன்சிலரின் அட்டகாசம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ் வந்து கவுன்சிலர் ராஜாமுகமதுவை வீட்டுக்கு போகச் சொல்லி அறிவுரை வழங்கினார்.
ஆனால் ராஜாமுகம்மது சப் இன்ஸ்பெக்டர் சுரேஷையும் தரக்குறைவாக பேசியதுடன் அவரிடமும் தகராறு செய்தார். இதனால் ஆத்திரமடைந்த எஸ்.ஐ சுரேஷ் அதே இடத்தில் வைத்து அதிமுக கவுன்சிலர் ராஜாமுகமதுவை நன்றாக 'கவனித்தார்'.
கிடைத்து அடி, உதையில் அடங்கிய ராஜா முகம்மதுவை எஸ்.ஐ கைது செய்தார்.
பின்னர் விடுதலை செய்யப்பட்ட ராஜா முகம்மது, தன்னை போலீசார் வேண்டுமென்றே தாக்கிவிட்டதாகக் கூறி மதுரை அரசு மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ளார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications