நடிகை வீட்டில் விபச்சாரம்-சித்த வைத்தியர், 2 பெண்கள் கைது
சென்னை:
சென்னையில் பிரபல நடிகையின் வீட்டை வாடகைக்கு எடுத்து மசாஜ் கிளப் என்ற பெயரில் விபச்சாரம் நடத்தி வந்த சித்த வைத்தியர் மற்றும் 2 பெண்களைப் போலீஸார் கைது செய்தனர்.
சென்னை நகரில் உள்ள மசாஜ் கிளப்களில் போலீஸார் அதிரடியாக சோதனை நடத்தி அங்கு விபச்சாரம் செய்வோரைப் பிடித்து வருகின்றனர்.
இந் நிலையில் சாலிகிராமம் கண்ணாத்தாள் தெருவில் கேர் அண்ட் க்யூர் என்ற பெயரில் அமைந்த சித்த வைத்திய மசாஜ் கிளப்பில் விபச்சாரம் நடப்பதாக விபச்சாரத் தடுப்புப் போலீஸாருக்குத் தகவல் வந்தது.
இதையடுத்து போலீஸார் அங்கு விரைந்தனர். அப்போது அங்கு மசாஜ் என்ற பெயரில் வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுத்து விபச்சாரம் நடப்பது தெரிய வந்தது.
இதையடுத்து கேரளாவைச் சேர்ந்த சிந்து, நாகர்கோவிலைச் சேர்ந்த பொன்னி கைது செய்யப்பட்டனர். அந்த கிளப்பில், ஏராளமான ஆணுறைகள் குவியல் குவியலாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த மசாஜ் கிளப்பை நடத்தி வந்தவர் சித்த வைத்தியர் டாக்டர் ராஜசீலன். அவரையும் போலீஸார் கைது செய்தனர். இவர் ஏற்கனவே நாகர்கோவிலில் இதுபோல மூலிகை வைத்தியம் பார்த்து வந்தார். அங்கு சரியான வருமானம் இல்லாததால் சென்னைக்கு வந்து விபச்சார டாக்டராக மாறியுள்ளார்.
டாக்டர் ராஜசீலன் கிளப் போர்வையில் விபச்சாரம் நடத்தி வந்த வீடு, பிரபல நடிகை ஒருவருக்குச் சொந்தமானதாகும்.
அவருக்கு மாதம் ரூ. 10 ஆயிரம் வாடகை கொடுத்து வந்துள்ளார் ராஜசீலன். அந்த நடிகைக்கு இந்த விபச்சார கிளப்பில் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்று போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications