லூசியானா ஆளுநரான இந்தியர்
வாஷிங்டன்:
இந்திய வம்சவாளியைச் சேர்ந்த பாபி ஜிந்தால், அமெரிக்காவின் லூசியானா மாகாண ஆளுநராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க மாகாணம் ஒன்றின் ஆளுநர் பதவிக்கு இந்திய-அமெரிக்கர் ஒருவர் தேர்வு செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.
36 வயதே ஆகும் ஜிந்தால், குடியரசுக் கட்சி சார்பில் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இந்தியாவிலிருந்து இடம் பெயர்ந்த இவரது பெற்றோர் அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் செட்டில் ஆனார்கள்.
1971ம் ஆண்டு லூசியானாவில் பிறந்த பாபி ஜிந்தால், மிகவும் இளம் வயதில் அரசியலில் நுழைந்தவர். 2001ம் ஆண்டு அதிபர் ஜார்ஜ் புஷ் ஜிந்தாலை, சுகாதாரம் மற்றும் மனித வள சேவைத் துறையின் இணைச் செயலாளராக நியமித்தார்.
2003ம் ஆண்டு நடந்த லூசியானா மாகாண ஆளுநர் தேர்தலில் ஜிந்தால் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். இருப்பினும் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவேன் என அறிவித்தார்.
2004ம் ஆண்டு நடந்த அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி. ஆனார். இந்த நிலையில் கடந்த 20ம் தேதி லூசியானா மாகாண ஆளுநர் தேர்தல் நடந்தது.
இதில் பாபி ஜிந்தால் போட்டியிட்டார். அவருடன் மேலும் 11 பேர் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில் ஜிந்தால் மொத்தம் பதிவான வாக்குகளில் 53 சதவீத வாக்குகளை (6,25,036 வாக்குகள்) பெற்று அபார வெற்றி பெற்றார்.
மிகவும் இளம் வயதில் ஆளுநர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டவர் என்ற பெருமையையும் இந்த வெற்றியின் மூலம் ஜிந்தால் பெற்றுள்ளார்.
வெற்றி பெற்ற பின்னர் தனது மனைவி சுப்ரியாவுடன் செய்தியாளர்களிடம் ஜிந்தால் பேசுகையில், எனது தந்தையும், தாயும், இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் கோட்லாவிலிருந்து அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்து வந்தனர். அமெரிக்கர்களாக வாழ வேண்டும் என்ற கனவுடன் அவர்கள் வந்தனர். இன்று அவர்களின் கனவு என் மூலமாக நிறைவேறியுள்ளது.
லூசியானா மாகாணத்தின் வளர்ச்சிக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் தீவிரமாக பாடுபடுவேன். அனைவரின் ஒத்துழைப்போடும் அதை சாதிப்பேன் என்றார் ஜிந்தால்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications