லாரி ஸ்டிரைக் மோசமடைகிறது - பல கோடி இழப்பு
கேரளா: கேரளாவில் நடந்து வரும் லாரி ஸ்டிரைக் காரணமாக, தமிழக வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தினசரி பல கோடி இழப்பு ஏற்பட்டு வருவதால் வர்த்தகர்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.
கேரளாவில் கடந்த 4 நாட்களாக லாரி ஸ்டிரைக் நடந்து வருகிறது. இதனால் தமிழக லாரிகள் கேரளா செல்ல முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அனைத்து லாரிகளும் கேரள எல்லையையொட்டிய தமிழகப் பகுதிகளில் நிற்கின்றன. இந்த ஸ்டிரைக் காரணமாக தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு செல்ல வேண்டிய காய்கறிகள், இறைச்சி, பூக்கள், முட்டைகள் உள்ளிட்ட அனைத்துமே போக முடியாமல், தேங்கிக் கிடக்கின்றன.
லாரிகள் கேரளாவுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருப்பதால் கோவை, கன்னியாகுமரி, நாமக்கல் மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கரூர் உள்ளிட்ட பிற மாவட்ட வர்த்தகர்களுக்கும் பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மட்டும் இதுவரை ரூ. 10 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அச்சுதானந்தன் எச்சரிக்கை:
இதற்கிடையே, லாரி உரிமையாளர்கள், தங்களுடைய வேலை நிறுத்தத்தை திரும்ப பெறாவிட்டால் அவர்களின் லாரிகள் பறிமுதல் செய்யப்படும் என்று கேரள முதல்வர் அச்சுதானந்தன் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வரும் லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்கை திரும்ப பெற்று லாரிகளை இயக்க முன்வர வேண்டும். அப்படி இல்லையெனில், ஸ்டிரைக்கில் ஈடுபடும் லாரிகள் அனைத்தும் அரசால் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications